N.S.கிருஷ்ணன் நகைச்சுவை சுரங்கம் !!
மதுவின் கொடுமை உணர்ந்தவர் N.S.கிருஷ்ணன்.
திரைப்பட உலகில் தனக்கு என தனி பாணி வகுத்து செயல் பட்டவர் காலம் சென்ற கலைவாணர் அவர்கள். இப்போது வரும் திரைப் படங்களில் வருவதெல்லாம் சிரிப்பாகவா இருக்கிறது. கலைவாணர் சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் சிந்திக்க வைக்கும் ஆற்றலும் படைத்த உன்னதமான நடிப்புலக சக்கரவர்த்தி என்றால் அது அவர் மட்டுமே. ஆனால் அப்படி சிறப்பு பெற்ற அவர் சீரழிந்தது இந்த மதுவினால் மட்டுமே!தயவு செய்து குடிப்பவர்கள் இந்த கட்டுரையை கவனமாகப் படியுங்கள்.
ஆனால் திரைப்பட உலகமும் சரி கவிஞர்கள் சாம்ராஜ்யமும் சரி இந்த மது என்னும் அரக்கனின் பிடியில் இருந்து தப்பித்ததாக வரலாறு என்பது இதுவரை இல்லை. கலைஞர்களுக்கு மது என்பது ஒரு சாபக்கேடு அதில் எனக்கு எள்ளின் முனை அளவு கூட சந்தேகம் இல்லை. ஒரு நாள் கூட குடிப்பதற்கு கலைவாணர் மறப்பதே கிடையாது. அதன் விளைவு கல்லீரல் பழுதடைந்து குடல்கள் வெந்து புண்ணாகி நோய்வாய்ப்பட்டு உடல்நிலைமுழுவதும்சோர்வுபெற்றதோடுஅதுவரைபெற்றபெயர்,புகழ் இழந்ததோடுசெல்வத்தையும் கவுரவத்தையும் சேர்த்து இழந்தார். இறுதி மூச்சு போகும்வரை அவரால் இழந்த எந்த செல்வத்தையும் திரும்ப மீட்க முடியவில்லை.(தயவு செய்து மதுப் பிரியர்கள் இந்த இடத்தை கவனிக்கவும்) நோய் மிகவும் முற்றிய நிலையில் உடல்நொந்து உள்ளம் நொந்து அவர் நம்மைவிட்டு விட்டு மறைந்தார்.
அவர் வாழ்க்கை என்பது ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்கள் போலவே அமைந்தது. எப்படி சிரித்து வாழ வேண்டும் என்பது நாணயத்தின் ஒரு பக்கம். எப்படி குடிப் பழக்கதிற்கு அடிமை ஆனதால் பணத்தை,புகழை கவுரவத்தை இழந்தார் என்பது மற்று ஒரு பக்கம். எனவே நாம் நமது வாழ்வில் அந்த நல்ல பக்கத்தினைமட்டும் கடைப் பிடித்து வாழ்வோம். சரி இனி விஷயத்திற்கு வருவோம்.
ஒருமுறை அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தன் சுய கட்டுப்பாட்டை இழக்கும்நிலைவந்தபோது சொன்னாராம்.எவ்வளவுதான் குடித்தாலும் நான் நிதானம் இழக்க மாட்டேன் ஆமா இந்த செருப்பை எங்கே வச்சேன் புரியல்லையே (காலிலேயே தான் செருப்பு இருந்தது)இது மது கலைவாணருக்குத் தந்த பெருமை அல்லவா.
அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் இரவு உணவு வீட்டில் சாப்பிடுவது என்பது கிடையாது. உணவகத்திற்கு செல்வது அவர் வழக்கம் பெரும்பாலும் தோசை அவர் விரும்பி உண்ணும் உணவு சர்க்கரை தொட்டு. அந்த காலத்தில் திடீர் என்று சர்க்கரைக்கு தட்டுப்பாடு நிலவி வந்ததால் அனைத்து உணவகங்களிலும் சீனி வழங்குவதை நிறுத்தி விட்டனர்.இதனை அறியாத கலைவாணர் எப்போதும்போல உணவு தருபவரிடம் யப்பா தோசை நல்லா சீனி வைச்சு கொண்டுவாடா ராசா என்றார். அவனோ அய்யா மேல போர்டு எழுதி போட்டிருக்காங்க பாத்துக் கிடுங்க என்றான். என்னாலே எழுதி இருக்கு?என்று கேட்டு போர்டை படித்தார் கலைவாணர். அதில் இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது என்று இருந்தது. படித்த பிறகு அவர் சரி என்ன செய்ய தோசையை கொண்டு வா என்றுசொல்ல அவனும் கொண்டுவர அதனை சாப்பிட்ட பிறகு இன்னொரு தோசை கொண்டுவா என்றார்.அவனும் கொண்டுவர இப்ப திருப்பி சீனி கேட்டார் கலைவாணர்.என்னாங்க உங்களோட பெரிய ரோதனையா போச்சு.படிச்சீங்கள்ள போர்டுஎன்றான்.ஆமாடஎன்ன அதில போட்டிருக்கு.இன்று, ( முதல் தோசைக்கு ) சீனி கிடையாது என்றுதானே எழுதி உள்ளது. நான் இரண்டாவது தோசைக்கு தானே கேக்கிறேன்.இது எப்படி இருக்கு? சிரிக்கவும் வைத்து சிந்திக்க வைப்பவர் அவர் ஒருவரே. பிறகு உணவகத்துக்காரர் சுதாரித்து மறுநாள் போர்டில் வாசகத்தை சிறு மாற்றம் செய்து எழுதினார். இனிமேல் தோசைக்கு சீனி இல்லை என்று.சாப்பிடவந்த கலைவாணர் போர்டை பார்த்துபின் யப்பா சர்வர் இன்னைக்கு எனக்கு ரொம்ப பசியா இருக்கு அதனாலே ரெண்டு தோசை கொண்டுவாடா மகனே என்றார்.அவனும் கொண்டுவந்தான்.சீனி கேட்டார் கலைவாணர். அய்யையோ என்னாங்க இது உங்களோட ரொம்ப பேஜாரா இருக்கு.படிங்க போர்டை என்றான். அதுக்கு கலைவாணர் என்னாடா எழுதி இருக்கு.இனி " மேல்" தோசைக்கு சீனி கிடையாதுன்னு எழுதி இருக்குடா நான் கீழ்தோசைக்கு கேட்கிறேன்டா மவனே என்றாராம். அத்துடன் சர்வர் அந்த வேலையை விட்டுட்டுப் போய்ட்டான் அவன். இன்மேல் மானஸ்தன் எவனும் ஹோட்டல் நடத்த மாட்டான் என்று அவனும் கடையை பூட்டிட்டு போய்விட்டானாம். எப்படி கலைவாணரின் நகைச்சுவை உணர்வுகள். நல்ல இருக்குதா? நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment