அழ அழ
சொல்வார் நம்மவர்!
சிரிக்க சிரிக்க சொல்வார் பிறர்!!
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.அது
என்னான்னா:-
YOU TELL ABOUT YOUR FRIENDS!
I WILL TELL ABOUT YOU!!................. என்று
இதுக்கு
என்ன பொருள் என்றால் நீ உனது நண்பர்களை பற்றிசொல்.நான் உன்னை பற்றி சொல்கிறேன்
என்று.
அதாவது ஒருமித்த கருத்து உடையவர்கள் மட்டுமே நண்பர்களாக முடியும்.அந்த
நண்பர்களில் நமக்கு உண்மையான நண்பர்கள் யார்?போலியாக நமது வருமானத்தை மட்டுமே
குறியாக கொண்டு அதை அனுபவிப்பதர்காக மட்டும் நம்மிடம் பழகும் நண்பர்களும் உண்டு.
அதை எப்படி நாம் அறிவது?அதுதான் இன்று நம் முன்னே உள்ள கேள்வி.
நாம் ஒரு காரியம்
செய்யும்போது அதில்வரும் சாதக பாதகங்களை நம்மிடம் சொல்லி அது நமக்கு சில நேரம்
கசப்பாக கூட இருக்கலாம். அப்படி உடனிருந்து நமக்கு நல்ல மந்திரியாக ஆலோசனை
சொல்பவர்கள் மட்டுமே நல்ல நண்பர்கள்.
அனால் அதே சமயம் நாம் எது செய்தாலும் அதில்
வரும் தவறுகளை நமக்கு சுட்டிகாட்டாமல் தனக்கு எது ஆதாயமோ அதை மட்டுமே அனுபவிப்பவர்கள் சலுகை பெறுபவர்கள் உண்மையான நண்பர்கள் அல்லர்.
இதை மையமாக வைத்து எனது தந்தை அவர்கள் எனக்குசொல்லி
சென்ற கருத்தை வாசகர்களுக்கு சிந்தனை பெட்டகத்தின் முன் வைக்கிறேன்.
பொருள் அறிந்து
செயல் படுங்கள்.என்ன சரியா.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment