வாய்
விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
கூட்ட நெரிசல் மிகுந்த நகர பேருந்தில் ஒரு பெண்ணிற்காக தனது இருக்கையை
விட்டு கொடுத்த ஆடவனிடம்:
பெண்”- ஏன் சார் ! இதே ஒரு
கிழவி உங்கபக்கதில் நின்று இருந்தால் உங்கள் இருக்கையை நீங்கள் விட்டு கொடுத்து
இருப்பீர்கள?நான் ஒரு அழகான யுவதி என்பதனால் தானே விட்டு தந்தீர்கள்? என கேட்க
ஆண்:- சே!! சே !! சத்தியமா
சொல்றேன் நீங்க ஒரு யுவதி அதாலே என் இடத்தை நான் விட்டு தரலை.நீங்க முதலில் சொன்னீங்களே
அதுதான் உண்மை.அதனால் தான் நான் என் இடத்தை உங்களுக்கு விட்டு தந்தேன்
.
பெண்:-!! !! ?? !! !!
-------------------------- - - - - - - - - - - - - - - - -- - -
- - - - - - - - - - - - - - - - -
--------
சாப்பிட வந்தவர் :- ஏன் சர்வர்.உங்க ஹோட்டெல் பதார்த்தம் எதுவுமே
சூடாகவே
இல்லை?
சர்வர்:- ஏன் சார் நீங்க
ஹோட்டல் போர்டினைப் பாக்கவே இல்லையா.
வந்தவர்:-இல்லையே பாக்கலையே என்னான்னு போட்டு இருக்கு.
சர்வர்:- சார்.எங்க ஹோட்டல்
பெயரே ஆறிய பவன் தானே சார்.
வந்தவர் :-!! ?? !! ?? !! ??
-
- - - - - - - - - - - - - - - ----- ---- --- --- --- --- ---- ---
--- --- ---- --- ---- --- -
வாலிபன்:- (தனது காதலியின் அம்மாவிடம்) சத்தியமா சொல்றேன்.உங்க பெண்ணை
விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!!
அம்மா:- அடச்சீ ஏன் தம்பி உங்க குடும்பமே விவஸ்தை கெட்ட குடும்பம்போல
இருக்கே
வாலிபன்:- ஏன் ஏன் அப்படி சொல்றீங்க.
அம்மா:- நீ இப்ப சொன்னியே அதே வார்த்தையை தான் உங்க அப்பன் என் அம்மாவை பார்த்து இருபது வருஷத்துக்கு முன்பு சொல்லிருக்கார்.
(இது எப்படி இருக்கு) -
No comments:
Post a Comment