கவியரசரைப் பற்றிய ஒரு நினைவலை !!
வணக்கம்.திரைப்படத்துறையில் தனக்கு என ஒரு தனி இடத்தை தக்க வைத்து
கொண்ட பல கவிஞர்களுள் கண்ணதாசனும் ஒருவர் என்பதில் இருவேறு
கருத்துக்கள்இருக்கமுடியாது.அவர்வாழ்ந்த காலத்தில்M.G..R.அவர்களால்
அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர் தான் வாலி என்ற பெயர் உடையவர்.திருச்சி
ஸ்ரீ ரங்கம் அவரது ஊர்.
திரு வாலி அவர்கள் முதல்முதலாக " நல்லவன் வாழ்வான் " என்ற திரைப்
படைத்திற்கு எழுதிய பாடல்தான் " சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் --
சிந்திய கண்ணீர் மாறியதாலே " என்ற வரலாற்று சிறப்பு மிக்க அந்த பாடல்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நல்லவன் வாழ்வான் படத்திற்கு திரைக்கதை
வசனம் எழுதி இருந்தார்..திரு வாலி அவர்கள் எழுதிய அந்த பாடலில்
பேரறிஞரின் கருத்துக்களை மிக மெல்லிய நூல் இழைகளாக கோர்த்து
வழங்கியதை இன்றும் என்னால் நினைத்து பார்க்க முடிகிறது. எதையும்
தாங்கும் இதயம்,என்று அண்ணா கூறிய கருத்தும் அந்த பாடலில் இடம்
பெற்றிருந்தது. அதன் பிறகு M.G. R அவர்கள் திரு வாலி அவர்களுக்கு
படகோட்டி திரைப்படத்துக்கு பாடல் எழுதும் பணியினை தந்தார். அதில்
மீனவனாக வரும் புரட்சி நடிகர் மீனவ சமுதாயத்தின் அவலநிலைகளை
குறித்து ஒரு தத்துவ பாடல் தருமாறு திரு வாலி அவர்களை கேட்டு
கொண்டார். அந்த பாடல்தான் "கடல்மேல் பிழைக்க வைத்தான் என்ற
பாடல். அதில் ஒரு வரி:- கடல்நீர் நடுவே பயனம்போனால் குடிநீர் தருபவர்
யாரோ? .. என்று ஒருவரி வரும். அதிகாலை வேளையில் நடை பயிற்சி
செய்வதனை வழக்கமாக கொண்ட கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
இந்த பாடலை அவர் பயணித்த மகிழுந்தில் இருந்த வானொலி மூலமாக
கேட்டவுடன் அதன் ஓட்டுனரிடம் யாரப்பா இந்த பாடல் எழுதியது என்று
கேட்க அவரும் வாலி என்று பதில் சொல்ல உடன் கவிஞர் உனக்கு அவர்
இருக்கும் இடம் தெரியுமா என கேட்டார். அதற்கு தெரியும் என்று சொன்ன
உடன் அவர் வீட்டுக்கு வண்டியை இட்டுச்செல் என ஆணை பிறப்பித்தார்
கவிஞர். கண்ணதாசன் தனது வீட்டுக்கு வந்துள்ளார் என்று கேள்விப்பட்டதும்
அதிர்ச்சியில் உறைந்த வாலி அவர்கள் கவிஞரை வரவேற்று இல்லத் தின்
உள்ளே அழைத்து சென்றார். கவிஞர் வாலி அவர்களை பார்த்து தாங்கள்
எழுதிய அந்த குறிப்பிட்ட பாடலின் குறிப்பிட்ட வரிகள் தம்மை மிகவும்
கவர்ந்து விட்டது என மனதார பாராட்டியதுடன் தனது கழுத்தில் தான்
அணிந்து இருந்த ஆறு பவுன் தங்க சங்கிலியினை பரிசாக அளித்தார்.
இன்றளவும் கவிஞர் வாலி அவர்களது கலை சேவை பெட்டகத்தில் அந்த
தங்க சங்கிலி பாதுகாப்பாக உள்ளது என்று ஒரு தொலைக்காட்சி பேட்டி
நிகழ்ச்சியில் திரு வாலி அவர்கள் சொன்ன நிகழ்வினை நான் உங்கள்

சிந்தனைக்கு விருந்தாக படைத்திருக்கிறேன். படித்து இன்புறுக. எல்லோரும்
இன்புற்று இருக்க வேண்டுவதே அல்லால் வேறு ஒன்றும் அறிந்திடேன்
பராபரமே!! நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:
Post a Comment