Tuesday, 12 March 2013

சைத்தானின் லீலைகள் !!


சைத்தானின் லீலைகள்.


அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கம்.
 பொதுப்  பிரிவில் நான் இன்றைய தினம் உங்கள் சிந்தனைக்கு தரும் விருந்து யாதெனின் இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியில் மனிதகுலம் தோன்றி,வாழ்ந்து,மறைந்து போகும் வரையில் கீழே குறிப்பிட்ட விஷயங்களை எந்த  காவல்துறையானாலும் சரி, நீதித்துறை என்றாலும் சரி முற்றிலுமாக தடைசெய்துவிடமுடியாது என்றே நானும்   கருதுகிறேன்.
அவை யாதெனின்”-

    மது !!
    மாது!!
    சூது !!


இறைவன் இந்த பூமியை படைத்து அதில்  மனிதனின் உருவை மண்ணால் செய்து அந்த மண் பிண்டத்தை  அனைத்து தேவாதி தேவர்களையும்  ரிஷிகளையும்  மற்றும் பஞ்ச பூதங்களையும்  வணங்க  சொன்ன போது எல்லோரும் வணங்கியபின் நெருப்பால் வடிவமைக்கபட்ட சைத்தான் மட்டும் வணங்க மறுக்கிறான்..

 ஏன் எனில் இறைவா நான் உன்னை எத்தனை முறைவேண்டுமானாலும் வணங்குகிறேன்,ஆனால் இந்த மண் பிண்டத்தை என்னால் வணங்கிட முடியாது  ஏன் எனில் நான் நெருப்பினால் படைக்கப் பட்டவன்  என்று கூறுகிறான்.அப்போது இறைவன் சைத்தானிடம் கூறுகிறான் நான் இந்த மனிதனை உருவாக்குவது இந்த பூமியில் நல்ல பல காரியங்களை செய்வதற்கும் மனிதனை ஒரு புண்ணிய புருஷனாக மாற்றுவதற்கும்தான்.இந்த மனிதனால் இந்த பூமி பற்பல நன்மை பெறப் போகிறது.எனவே நீ வணங்கு என சொல்லும்போது சைத்தான் முடியவே  முடியாது இறைவா உனை ஆயிரம் முறைகூட வணங்கச் சொல் நான் வணங்குகிறேன் ஆனால் இந்த மண் பிண்டத்தை என்னால் எப்படி இறைவா வணங்க முடியும்  என கூற அப்படி என் கட்டளையை  நீ ஏற்று மனிதனை வணங்க வில்லை என்றால்  இன்றிலிருந்து நீ எனக்கு மாறுபட்டவன் உனக்கு என்னிடத்தில் அதாவது இந்த சொர்க்கத்தில்  இடம் இல்லை நீ நரகம் சென்றடைவாய் என சொன்னார்.

அதற்கு சைத்தான், இறைவா எந்த நோக்கத்திற்காக இந்த மனிதனை நீ படைத்தனயோ அதை கெடுப்பேன்.  இறைவனது கிருபைகளுக்கு எதிராக மனித குலத்தை பாவச்செயலில் தள்ளி இறைவா நீங்கள் நினைப்பதுபோல அவர்களை புண்ணிய ஆத்மாக்களாக ஆக்கிடும் அவர்களால் இந்த பூமி உன்னத நிலையை அடைந்திட  செய்திடும் முயற்சிகளை நான் முறியடித்து காட்டுவேன் அவர்களை பாவ கடலில் தள்ளுவதற்கு மது,மாது, மற்றும் சூது இவைகளை எனது ஆயுதமாக பயன்படுத்தி அவர்களை புண்ணியர்களாக ஆக விடாமல் தடுத்து பாவிகளாக மாற்றி காட்டுகிறேன் என சைத்தான் சூளுரைத்து அதனை ஒரு  சபதமாக எடுத்து கூறினான் என  நமக்கு இஸ்லாமிய மதத்தார்கள் கூறிய கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்துள்ளது என்றால் அது மிகை இல்லை.

எனவே நாம் அனைவரும் அந்த சைத்தானின் மேலே சொன்ன மூன்று பாவ செயல்களிலும்ஆட்பட்டுவிடாமல்மிகவும்எச்சரிக்கையாக வாழவேண்டுகிறேன் மற்ற பிற பின்.மீண்டும் நாளை சந்திப்போமா? நன்றிபல வணக்கம் பல.மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment