Tuesday, 9 April 2013

லேவாதேவி ( வட்டி) தொழில் செய்வது பாவமா ? சிறு விளக்கம் !!


தமிழனாக இருங்கள் !!

தமிழர்களிடமாவது தமிழிலேயே

பேசுங்கள் !!

இது மிகவும் அவசியம் !! 



அன்பிற்குரிய உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் 

எனது உயிரினும் மேலான தமிழ் பேசும் அன்பு 

நெஞ்சங்களே !!


முதலில்உங்கள்அனைவருக்கும்எனது நன்றி

கலந்த வணக்கம்.!!


மீண்டும் மீண்டும் வித்தியாசமான தலைப்புகளில் 

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மன

மகிழ்ச்சி அடைகிறேன்.  நிற்க.  


தமிழ்நாட்டில்ஆதிகாலம்தொட்டுஇந்த லேவாதேவி 

தொழில் செய்து வந்தவர்கள் காரைக்குடி,கண்டர 

மாணிக்கம்,தேவகோட்டை,சிறுவயல்,நாட்டரசன் 

கோட்டை ,மலேஷியா நாட்டின் சிரம்பான் இது 

போன்ற மற்றும் இதனை அடுத்து இணைந்துள்ள 

பகுதிகளில்வாழ்ந்து வந்த செட்டியார் இனப் பெரு 

மக்கள் தான் இந்த வட்டித் தொழிலை அன்று முதல் 

இன்றுவரைகண்ணும்கருத்துமாகசெய்து வருவதில் 

செட்டிமகன்களுக்கு இணை செட்டிமகன்களே என்று 

என் தந்தை கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.


பணம், பணம், பணம் மட்டுமே இவர்கள் மரியாதை

தந்து மதித்திட்ட ஒரு பொருள். ஒரு பைசா கூட 

கணக்கினில் விட்டுத்தர மாட்டாத இவர்களை 

செட்டிப் பிள்ளையோ !! கெட்டிப் பிள்ளையோ !!

என்றுகூடஅழைத்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.


அவர்களில் ஒரு முதுபெரும் வயதுள்ள பெரியவர் 

ஒரு பழைய பாடல் ஒன்றினைச் சொல்லுவார்.


துட்டு ஒன்றிற்கு எட்டுபொருள் வாங்கி 

பொருள் ஒன்றினை எட்டு துட்டுக்கு விற்றாலும் 

அதுவட்டிக்கு இணையாகாது என்பார்.  


ஏன் என்றால் இந்த பூமியில் மூன்றுபொருட்களுக்கு

 மட்டுமே தூக்கம் என்பதுகிடையாதாம்.அவைஎவை 

எனில்காலம்,கடல்அலை,அசலின்வட்டிஇவைகளே 

அந்த மூன்றும்.


இதையே ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் :- 

TIME,TIDE,AND INTEREST WAITS FOR NO MANS ORDER!!

ஆக அப்படிப்பட்ட இந்த வட்டித் தொழில் செய்திடல் 

பாவமா ? இதுதான் இன்றைய தலைப்பு நேயர்களே.


திருவிளையாடல்(பழைய படம்)அதில்ஒரு  வசனம் 

பாட்டில்பிழைஇல்லை.இருந்தாலும்அதுமன்னிக்கப்

படலாம். ஆனால் பொருளில்தான் பிழை உள்ளது 

என்பார் நக்கீரர். அதுபோல இந்தத் தொழிலில் 

நியாயமான வட்டி வாங்கும்வரை இது பாவமான 

தொழில் அல்ல.  ஆனால் அதேசமயம் எதிரியின் 

பலவீனம் அறிந்து அவனது திடீர் தேவைகளை 

உணர்ந்து இன்று நாடு எங்கிலும் கொள்ளைக்காரத்

தனமாக வசூலிக்கப்பட்டு வட்டித் தொழில் செய்வது 

மட்டுமே பாவம் என்று சொல்லப்படுகிறது. ஆனால்

அப்படிப்பட்ட அநியாய வட்டிதனை இந்த செட்டிகள் 

என்றுமே வசூலித்தது இல்லை.  என்று இந்த அருந் 

தொழில் இவர்களது கைவிட்டு வேறு யார்யாரோ 

எவர் எவரோ வேறோருவர்களது கைக்கு சென்று 

விட்ட பிறகுமட்டுமே இந்த அபராத,அநியாய வட்டி 

இந்த நாட்டினில் வசூலிக்கப்படுகிறது. அது வேறு 

விஷயம்.  


இந்த வட்டித் தொழில் நியாயமாக வட்டி வசூலிக்கப்

படுகின்ற வரை எந்த பாவமும் இல்லை.ஆனால் 

அதேநேரம் கழுத்தை இறுக்கி பிடித்து அஞ்சு வட்டி 

பத்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என்றெல்லாம் 

ஈவு இரக்கமில்லால் வசூலிக்கப்படும்போது பாவம்

என சொல்லஇடம்உள்ளதென்பதை மறுத்திட இயல

வில்லை. இன்று உலகம் எங்கும் அதிகமான 

எண்ணிகையில் வாழ்ந்து வருபவர்கள் இஸ்லாமிய 

பெருமக்களே.  அவர்களது நாடுகளில் பெரும்பாலும் 

இந்த வட்டி என்பது தடை செய்யப்பட்ட பாவமான 

(ஹராமான) விஷயமாகவே இன்றும் சட்டவடிவில்

மறுக்கப்பட்ட ஒன்று அன்பர்களே.


ஆகவே என்னைப் பொறுத்தவரைஎனக்குஎன்று ஒரு 

கொள்கைஉண்டுஅன்பர்களே. அது என்னவென்றால் 

எந்தத் தொழில் செய்தாலும் பரவாயில்லை. அதில் 

புண்ணியம் கிடைக்காமல் வெறும் வரும்படி ஒன்று 

இருந்தால் போதுமானது. பாவம் என்பது ஒரு சிறு 

வடிவில்கூட கிஞ்சித்தும் இருந்திடக் கூடாது.  ஏன் 

பாவம் இருக்கா இல்லையா என்று பட்டிமண்டபம் 

செல்லும் ஒரு தொழில் செய்வதற்கு பேசாமல் 

இருந்துவிட்டுப் போய்விடலாம். பிறர் மனம்வெம்பி 

வேதனைப் பட்டு வயிறு எறிந்து மனம் கசந்து ஒரு 

தொழில் செய்யவேண்டும். கூடாது கூடவே கூடாது.

நம்மிடம் இருக்கிறதா யாரும் தேவை உள்ளவர்கள் 

நம்மைத்தேடிவந்து உதவி கேட்கிறார்களா அவர்கள் 

நாணயம் எப்படி,திரும்பி பணம் வராமல் இருக்க 

வாய்ப்பு உள்ளதா இவை எல்லாம் சீர்தூக்கி அலசி 

ஆராய்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்த 

பணம் மட்டும் திருப்பி தந்தால் போதுமானது. வட்டி 

பணம் என்னை பொறுத்தவரை தொழுநோய்காரன் 

கையில் உள்ள வெண்ணைக்கு சமமாகவே இதுநாள் 

வரைவாழ்ந்துவந்துள்ளேன்.எனக்கும்வயது அறுபது 

ஆகப் போகிறது.  இது எனது கொள்கை. உங்கள் 

எண்ணம் எப்படியோ. அதனை நான் அறிந்திலேன்.


தனக்கு ஒரு கொள்கை.அதற்கொரு தலைவன் 

தனக்கு ஒரு பாதை.அதற்கொரு பயணம்.உனக்கென

வேண்டும்.உயர்ந்திடு தம்பி.உழைத்திட வேண்டும் 

கைகளை நம்பி என்ற கவிஞர் வாலியின் பொருள் 

பொதிந்த பாடலின்படி வாழ்ந்துவருபவன் இந்த 

மதுரை TR.பாலு எனது அன்பு நேயர்களே !!



மீண்டும் நாளை வேறு ஒரு தலைப்பினில் உங்கள் 

அனைவரையும் சந்திக்கிறேன்.  அதுவரை உங்கள் 

எல்லோரிடம்அன்புவணக்கம்கூறி விடைபெறுவது 

உங்களின் அன்பு சகோதரன். மதுரை TR.பாலு.


No comments:

Post a Comment