உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
எனது உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே!!
உங்கள் அனைவருக்கும் எனது
இனிய காலை வணக்கம்.
இன்றையதினம் நான் தேர்ந்து
எடுத்துள்ள தலைப்பு,
சிலப்பதிகாரத்தினை மையமாக
வைத்து கலைஞர் எழுதி தயாரித்த
பூம்புகார் திரைக்காவியத்தில்
மறைந்த K.B.சுந்தராம்பாள் பாடிடும்
ஒரு பாடலில் வருகின்ற ஒரு
வரியின் விரிவாக்கம்தான் நமது
கட்டுரையின் தலைப்பு. பாடல் இது :-
அவ்வையார் கண்ணகியைப்பார்த்து
பாடுகின்றார் :-
அன்றுகொல்லும் அரசின் ஆணை
வென்றுவிட்டது !!
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது!!
(இந்தப்பாடலில், சில வரிகள் :- )
அடையாக் கதவாய் இமையா
விழியாய் ஆயிரம் யுகங்கள்
பொறுத்தாளே !!
இன்றுவிளையாநிலத்தின்விதையா
போன வேதனைஅறிந்துதுடித்தாளே
இந்தப்பாடலைப் புனைந்தவர் தமிழ்
இனத்தின் காவலர் முத்தமிழ்
அறிஞர் கலைஞர் அவர்கள். பாடல்
ரீ-ரிக்கார்டிங் நடந்தபோது பாடலில்
இரண்டாவதுவரியைத்தலைவர்
வேறுமாதிரி எழுதியிருந்தார்.
அதாவது :- அன்று கொல்லும்
அரசின் ஆணை வென்று விட்டதே !!
நின்று கொல்லும் தெய்வம் எங்கோ
சென்று விட்டதே !!
இதுதான் தலைவர் கலைஞர்
எழுதிய பாடல்வரிகள். இதைக்
கண்ணுற்ற K.B.சுந்தராம்பாள் பெரிய
பக்திமான். (எந்நேரமும் நெற்றியில்
விபூதிப் பட்டை.கழுத்தில்
உத்ராட்ஷக் கொட்டை.) தெய்வம்
எங்கோ சென்று விட்டதே என்று
பாட மறுத்தார். அன்று கலைஞர்
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் பணி
இருந்தவேளையில்
தொலைபேசிமூலம் தகவல் பெற்ற
கலைஞர் நாளை வந்து வரிகளை
நான் மாற்றி எழுதித் தருகிறேன்.
பாடல் பதிவினை ஒருநாள் தள்ளி
வைக்கச் சொல்லி மறுநாள்
சென்னை சென்று மாற்றி எழுதிய
வரிகள்தான் இது:-
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டதே என மாற்றி
எழுதியபின்பே பாடல்
கே.பி.சுந்தராம்பாள் பாட
ஒப்புக்கொண்டது கடந்தகால
வரலாறு.
அன்பர்களே !! நான் இங்கே
எதற்காக இந்தப்பாடலை
குறிப்பிடுகிறேன் என்று சொன்னால்
தலைவர் கலைஞர் அவர்கள் பெற்ற
மூத்த புத்திர பாக்கியம் திரு அழகிரி
இன்று செல்கின்ற பாதையைப்
பார்த்து அவரைப் பெற்ற தந்தை
மனம், என்ன பாடுபடும் என்பதை,
இன்று அவருக்கு, அவர் எழுதிய
பாடலே, ஒரு உதாரணமாக
ஆகிவிட்டதே, என்பதை
எண்ணுகின்றபோது,என்னால்எனது
விழிகள் சிந்திடும் கண்ணீரைத்
தடுத்திட இயலவில்லை.
அன்பர்களே!!ஆம்.இதுவே உண்மை.
உண்மையிலும் உண்மை!!
2௦11ம் ஆண்டு தமிழகத்தில்
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்
திராவிடமுன்னேற்றக் கழகம்
தோல்வியை சந்தித்தது.
முக்கியமான காரணம் மக்களுக்கு
நல்லபல திட்டங்களை அமல்
படுத்தியது. நாட்டின் பொருளாதார
வளர்ச்சிக்கு பாடுபட்டது. தனிமனித
வருமானத்தை உயர்த்தியது.வெறும்
3 மணி நேரத்திற்கு மிகாமல்
மின்சாரத் தட்டுப்பாட்டை
அதிகமாகிவிடாமல் தனதுநிர்வாகத்
திறமையினால் கட்டுக்குள்
வைத்திருந்தது. இவைதவிர
ராசிநிறைந்த நடிகர் விஜயகாந்த்
அவர்களுடன் தேர்தல் கூட்டு
வைத்திடாமல், ராசிகெட்ட
மருத்துவர் அய்யா ராமதாசோடு
கூட்டு வைத்துக்கொண்டது.
மக்களை ஏமாற்றும்வண்ணம்
செய்திடவே, இயலாத, இலவச
வாக்குறுதிகளை அள்ளி வீசாதது.
கிராமப்புற மக்களின் காதினில் பூ
சுற்றிடும் வண்ணம் அவர்களுக்கு
ஆட்டைதாறேன், மாட்டைத்தாறேன்
என அவங்களை ஏமாற்றி ஓட்டை
வாங்கிட முன்வராதது.ஆனால்
இவைகளை எல்லாம்விட மிகமிக
முக்கியமானது என்னவென்றால்
தலைவர் கலைஞர் அவர்கள்
பாத்திரம் அறிந்திடாமல் பிச்சை
இட்டதுதான் அவர்செய்த மாபெரும்
தவறு.என்ன? தனது மகன் என்ற
ஒரே காரணத்திற்காக அவரது தரம்
என்ன? தகுதி என்ன?இவருக்கு
இந்தப் பதவி தரலாமா? அதற்கு
இவர் தகுதிபடைத்தவரா என்று
எல்லாம் கிஞ்சித்தும்
யோசித்திடாமல் " தென் மண்டல
அமைப்புச் செயலாளர் " என்ற ஒரு
புதுப்பதவியை உருவாக்கி அதற்கு
என்றைக்கு நீங்கள் திரு அழகிரி
அவர்களை அந்தப் பதவியில்
அமர்திவிட்டீர்களோ !!
அன்றிலிருந்தே உங்களுக்கு
ஏழரைநாட்டுச் சனி,அட்டமச்
சனி,கண்டச் சனி, இவை
அத்தனையும் ஒன்று சேர்ந்து
உங்களை பீடிக்கத்
தொடங்கிவிட்டது என்பதனை
நீங்கள் இப்போதாவது உணர்ந்தால்
சரிதான் தலைவரே. சிலருக்கு
பதவியால் பெருமை. சிலரால்
அந்தப் பதவிக்குப் பெருமை. இந்த
இரண்டில் எதற்குமே தகுதி
இல்லாதவர் தங்களது புத்திர
பாக்கியம் திரு அழகிரி என்பதனை
நீங்கள் காலம் கட்ந்துதான்
உணர்ந்து கொள்வீர்கள் என்று
அன்றே நான் கணக்கு போட்டேன்
தலைவரே. அது இன்று
மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதை
மெய்ப்பித்த திரு அழகிரி அவர்கள்
வாழ்க. தளபதி திரு மு.க.ஸ்டாலின்
அவர்கள்தான், அவர்கள்
மட்டும்தான் நீங்கள் செய்த
அத்தனை புண்ணியங்களின் ஒரே
அரசியல் வாரிசு. அவரைமட்டும்
நீங்கள் மறந்திடாமல் அவருக்கு
இந்த நாட்டில் நடைபெற இருக்கும்
சட்டமன்றத் தேர்தலில் நீங்கள்தான்
வெற்றி பெறுவீர்கள். தயவு செய்து
அவருக்கு முதல்வர்பதவியை
வழங்கி உங்கள் திருக்கரத்தால்
அவரை முதலமைச்சரின்
அரியாசனத்தில் அமர்த்தி
வைத்தீர்கள் என்றால் இந்த
தமிழ்கூறு நல்லுலகம் உங்களை
வணங்கி மகிழும். இதுதான்
உண்மை. 2௦11 சட்டசபைத்தேர்தலில்
தோல்விக்கு தாங்கள் கூறிய
காரணம் திரு மு.க.அழகிரி
அவர்களைப் பற்றியதுதான் என்பது
எங்களைப்போன்ற மதுரை ஊர்க்
காரங்களால்தான்
கண்டறியமுடியும் என்பதையும்
உங்கள் மூத்தமகனுக்காக நீங்கள்
சொன்ன வாசகம் இதுதான்:- கூடா
நட்பு கேடாய் முடியும் !! என்ன !!
சரியா !! தலைவரே நான்சொல்வது?
என் தந்தை அவர்கள் அடிக்கடி
என்னிடம் ஒரு வார்த்தை
சொல்லிக்கொண்டே இருப்பார். அது
என்னவென்றால் :-
YOU TELL ABOUT YOUR FRIENDS !!
I WILL TELL ABOUT YOU !!
என்ற அந்த ஆங்கில வாசகத்தின்
அர்த்தம் தலைவரே !!:-
உன் நண்பர்களைப்பற்றி சொல்!!
நான் உன்னைப்பற்றிச்
சொல்கிறேன்!!
என்பதே ஆகும். நீங்கள் ஒரு
தந்தையாக உங்கள் மூத்தமகனுக்கு
எவ்வளவோ செய்திருக்கிறீர்கள்.
நான் இல்லை என்று
சொல்லவில்லை. ஆனால் அழகிரி
அவர்கள் யார் யாரோடு
சேர்ந்திருக்கிறார்? அவர்கள் எப்படிப்
பட்டவர்கள்? நல்லவர்களா?
அல்லவா ? குலம் என்ன ?கோத்திரம்
என்ன ? கந்துவட்டிக்காரர்கள்ஆச்சே
அவர்கள் !!இதை எல்லாம்
அவ்வப்போது விசாரித்து நீங்கள்
கண்டித்து இருக்கவேண்டாமா ? சரி
அதைப் பற்றிபேசி இப்போது என்ன
பயன். ஒன்றும் இல்லை. எல்லாம்
விதிப்படி நடக்கும். மனிதனால்
எதுவும் செய்திட இயலாது. இது
ஜோதிடம் கூறும் உண்மை. நீங்கள்
இத ஒப்புக்கொள்ளபோகிறீர்களோ
இல்லையோ எனக்குத் தெரியாது.
சொல்லவேண்டியடியதை
சொல்லிவிட்டேன். செய்ய
வேண்டியதை செஞ்சிக்குங்க.
நன்றி.வணக்கம். அன்புடன். மதுரை
T.R. பாலு.
No comments:
Post a Comment