Friday, 20 September 2013

அரசாங்கம் தொழில் செய்தல் தகுமா?முறையா?இது தர்மம் தானா?




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு!!



இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு !!




தமிழ்இனம்காத்திடவாழ்ந்திடுங்கள்!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ்பேசும்சகோதர,சகோதரிகள்


நடிவில் உரையாடும் பொழுது !!




உலகெங்கிலும் அங்கிங்கெனாதபடி


அனைத்து நாடுகளிலும் வாழ்ந்து


வரும் என் உயிரினும் மேலாக நான்


போற்றி,வாழ்த்தி,வணங்கி வரும்


எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் எனது


இனிய மாலை வணக்கங்கள்


அதனுடன் கூடிய இதயம் கனிந்த


நல் வாழ்த்துக்கள். நிற்க !!




இன்றையதினம் இந்தியாவில்


தமிழகம் உட்பட பல்வேறு


மாநிலங்களில் ஆளும் அரசுகள்


எத்தனை,எத்தனையோ தவறுகள்


செய்துகொண்டுதான் அரசாட்சி


நடத்திக் கொண்டு வருகின்றது


அன்பர்களே !!அப்படிப்பட்ட பல


தவறுகளில் இமயம் போன்றதே


அரசு தொழில் செய்வது.




பொதுவாக மக்களால் தேர்ந்து


எடுக்கப்பட்ட அரசாங்கம் என்ன


செய்திட வேண்டும் ? மக்களுக்கு


எந்த வகையில் நலத்திட்டங்கள்


மூலமாக அவர்களின் அடிப்படைத்


தேவைகளான குடிநீர்,மின்சாரம்,


வீட்டு வசதி,குறைந்தவிலையில்


உணவுப் பொருட்கள் போன்றவை


வழங்குதல் போன்று எத்தனையோ


செயல்களில்கவனம் செலுத்துவதை


மறந்து அரசாங்கமே தொழில்


செய்திட புறப்பட்டதால் எத்தனை


தொழில்கள் நசுங்கி நாசமாகிப்


போய் இருக்கின்றது தெரியுமா


அன்பர்களே !!




பொதுவாக தொழில் செய்து அதன்


மூலம் பணம் ஈட்டுதல் என்பது


தனியார் துறையின் உரிமை.


அதில் அரசாங்கம் தலை இட்டு


தொழிலை, அதன் கண்ணியத்தை


நாசப்படுத்தியதைத் தவிர வேறு


எதையும் எந்த அரசும் இதுவரை


சாதித்ததாக வரலாறு என்பது


கிடையவே கிடையாது என்


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



அதிலும் முக்கியமாக


போக்குவரத்துத்துறை மற்றும்


மதுபான விற்பனை மையம்


போன்ற மக்கள் அன்றாடம்


பயன்படுத்தும் துறைகள் நம்


அரசின் கோரப்பிடியில் சிக்கி


சின்னாபின்னமாகிக்கொண்டு


இருக்கிறது என்பதே நிதர்சனம்


நிறைந்த உண்மை. இதில்


போக்குவரத்துத்துறையை


அரசாங்கம் தனது வசமாக்கி


வைத்துக்கொண்ட பெருமை


தமிழ் இனத்தலைவர் திரு மு.


கருணாநிதி அவர்களையும்


மதுபான விற்பனை மையத்தை


அரசாங்கமே ஏற்று டாஸ்மாக்


என்ற நிறவனம் மூலமாக


அரசு தன வசமாக்கிக்கொண்ட


பெருமை மாண்புமிகு முதல்வர்


ஜெயலலிதா அவர்களையே


சாரும் என்பதில் எள்ளின்முனை


அளவுகூட சந்தேகம் இல்லை.


இதில் என்ன கொடுமை என்று


கேட்டால் நான் மதுரை நகரில்


பிறந்தவன்,வளர்ந்தவன்,


வாழ்ந்தவன். அந்த அடிப்படையில்


அரசாங்கம் அனைத்து பேருந்து-


-களையும் என்றைக்கு T.V.S.


நிறுவனங்களுள் ஒன்றான சதர்ன்


ரோட்வேஸ் என்ற மாபெரும்


நிறுவனத்திடம் இருந்து தமிழக


அரசு ஏற்றுக் கொண்டு அதனை


அரசுப் போக்குவரத்துக் கழகம்


என்ற பெயரில் இணைத்ததோ


அன்றோடு தொலைந்தது அந்தப்


பேருந்துகளின் நடத்துனரும்


ஓட்டுனரும் பொதுமக்களிடம்


மரியாதையுடன் கண்ணியத்துடன்


நடந்துகொண்ட மனோபாவம். இது


உண்மை..உண்மை.. அன்பர்களே.


நான்அந்தஇரண்டு நிறுவனங்களின்


(TVS & TNSTC) பேருந்துகளிலும்


பயணித்தவன் என்ற முறையில்


சொல்கிறேன் அன்பர்களே !!


TVS நிறுவனம் பேருந்துகளை


நடத்தியவரை அந்தந்த


ஒட்டுனராகட்டும், அல்லது


நடத்துனர் ஆகட்டும் அதில்


பயணிக்கும் பொதுமக்களிடம்


கண்ணியம், மற்றும் கௌரவம்


நிறைந்த வார்த்தைகளை மட்டுமே


அவர்கள் உபயோத்து வந்தனர்.


ஆனால் அதே நபர்கள் என்று


அந்த TVS நிறுவனம் தனியார்


தறையிலிருந்து அரசுப் போக்கு


வரத்துநிறுவனத்திடம் ஒப்படைக்கப்


பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை


நடத்துனரிடம் இருந்துவரும்


வாய் வார்த்தைகளில் எந்த


ஒரு கண்ணியமும் இல்லை


என்பதே நான் கண்ட உண்மை.


இது ஒருபுறம் இருக்க இந்த


மதுபான விற்பனை உரிமையை


என்று தனியாரிடம் இருந்து


அரசாங்கம் பறித்துக்கொண்டு


அதை டாஸ்மாக் நிறுவனம்


மூலமாக விற்பனை செய்யத்


தொடங்கியதோ அன்றோடு


தொலைந்தது அந்த விற்பனை


ஊழியர்களிடம்  நாம் அதுவரை


பெற்றுவந்த மரியாதை. ஆம்


அன்பர்களே !! நாம் ஏதோ அந்த


டாஸ்மாக் விற்பனைக்கடை


ஊழியர்களிடம் தானம்/இனாம்


பெறுவது போல அவர்கள்


பேசுகிற பேச்சும் நடத்துகின்ற


முறையும் எந்த மானம் உள்ள


குடிகாரனும் அந்தக் கடைக்கு


மறுமுறை செல்லவே மாட்டான்


ஆனால் குடிகாரனுக்கு எது மானம் ?



அன்பர்களே !!குறித்த விலையை


விட ஏன் அதிகமாக பணம்


கேட்கிறீர்கள் என்றால் சரக்கை


வேறு கடையில் வாங்கிக்கோ


என்று ஏளனமாக கண்ணியம்


குறைந்த வார்த்தைகளால்


அவர்கள் வாடிக்கையாளரிடம்


நடந்து கொள்ளும் முறை, கண்டு


இவர்கள் இவர்கள் உண்மை-


யிலேயே சூடு,சொரணை,மானம்


ரோஷம்,வெட்கம் உள்ளவர்களாக 


இருந்தால் மறுமுறை இந்த 


டாஸ்மாக் கடைக்கு சென்று 


சரக்கு வாங்கவே மாட்டார்கள்.


குவாட்டருக்கு 5 ரூபாய்,ஹாப்புக்கு


1௦ ரூபாய் என இவர்கள் அடிக்கும் 


கொள்ளையில் மேலிடத்திற்கும் 


பங்கு உண்டாம்.இந்த இலட்சணத்-


-தில் இந்தடாஸ்மாக் கடை வாசலில்


இரும்பு கம்பி கேட் வேறு. அய்யா 


நான் ஏறத்தாழ 5 ஆண்டுகட்கும் 


மேலாக மலேசியநாட்டின் தலை 


நகரமாம் கோலாலம்பூர் நகரில் 


வசித்தவன்,வாழ்ந்தவன். 


அங்கெல்லாம்  24 மணி நேரமும் 


மதுவிற்பனை செய்திடும் கடைகள் 


ஏராளம். அழகுநிறைந்த மங்கையர் 


பலர் அங்கு விற்பனையாளர்களாக


பணி செய்கிறார்கள். கடைமுழுதும்


குளிரூட்டப்பட்டவை. பாட்டிலில் 


குறிப்பிட்டுள்ள  விலையை இட 


ஒன்று அல்லது இரண்டு ரிங்கிட்டு


குறைவாகவே அவர்கள் நம்மிடம் 


பணம் பெறுவது உண்டு. நல்ல 


மகிழ்ச்சி ததும்பும் இன்முகத்தோடு 


கூடிய வரவேற்பு,அடடா அதை நான் 


என்னென்று சொல்வேன். சோத்துல


உப்பு போட்டு சாப்பிடும் எவனும் 


கோலாலம்பூரில் சரக்கு அடித்தவன் 


இந்தப் பாழும் தமிழகத்தில் மது 


சாப்பிடமாட்டன் சாப்பிடக்கூடாது.


 நாம் இப்போது கட்டுரையின் 


இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம் 


அன்பர்களே!!




எந்தத் தொழிலானாலும் சரி என்று 


அது என்று அரசாங்கம் கைக்கு 


போகின்றதோ அத்தோடு சரி அந்தத் 


தொழிலின் மேல் நாம் காட்டும் பக்தி 


மரியாதை,மதிப்பு.  இவை எல்லாமே 


கெடுத்துக் குட்டிச் சுவர் 


ஆக்கிவிடுவார்கள் அங்கு 


பணி செய்திடும் அரசு ஊழியர்கள் 


என்பதுதான் உண்மை. மரியாதை 


இருக்காது.லஞ்சப்பேய் தனது தலை 


விரித்து ஆடும். அரசின் கைக்கு 


போகும் எந்தத்தொழிலானாலும் சரி 


அந்தத் தொழில்அரசால் கற்பழிக்கப் 


-பட்டுவிடும் என்பதே இதுவரை நாம் 


கண்ட உண்மை.



என்னசெய்வது.போன ஜென்மத்தில் 


செய்திட்ட பாவம் இந்தப் பாழாய்ப்


போன அரசு ஊழியர்கள் கையால்,


அவர்களின் கண்ணியம் இல்லாத 


வார்த்தைகளைகேட்டுஅதிக விலை 


கொடுத்து கண் இருந்தும் 


குருடர்களாக,காது இருந்தும் 


செவிடர்களாகவே சரக்கு வாங்கி 


தண்ணி அடித்து போதைக்கு 


அடிமையாக சுயமரியாதை இன்றி  


நாம் வாழ்ந்து தொலைக்க வேண்டி 


உள்ளது. எல்லாம் " அவன் " செயல்.




அந்த ஆண்டவன்தான் மக்களைக் 


காப்பபாற்ற வேண்டும் என வேண்டி 


விரும்பிக் கேட்டுக்கொண்டு எனது 


கட்டுரையை நான் நிறைவு செய்து 


உங்கள் அனைவரிடமும் இருந்து 


அன்பு கலந்த நன்றியோடு அந்த 


நல்லஉணர்வுகளோடு விடை 


பெருகிறேன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment