Wednesday, 18 December 2013

மனிதனின் உடலில் இறைவன் அமைத்த மின்னணுக் கருவிகள் ? உங்களுக்குத் தெரியுமா? ஒரு சிறப்புக் கட்டுரை !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !!                         



அன்பர்களே !! எல்லாம் வல்ல 



இறைவன் நம் ஒவ்வொருவருடைய 



உடலிலும் பலவிதமான மின்னணுக் 



கருவிகளோடுதான் மனித 



இனத்தைப் படைத்து இருக்கிறான் 



என்பது நம்மில் அநேகர் 



அறிந்திடாமல் இருப்பது நமது 



துரதிர்ஷ்டமே ஆகும். இதற்கு மூல 



காரணம் என்ன என்று நாம் 



ஆராய்ச்சி செய்து பார்த்தால் நம்மில் 



அநேகமாக,1௦௦ பேர்களில் 95 பேர்கள் 



எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் 



தந்திட்ட அந்த அரிய பொக்கிஷமாம் 



ஆறாம்அறிவு என அழைக்கப்படும் 



அந்த " பகுத்தறிவினைப் " 



பயன்படுத்தாமலேயே வளர்ந்து, 



வாழ்ந்து பின் ஒருநாள் மடிந்து 



போவதே இதற்கு காரணமாகின்றது. 



பகுத்தறிவினை நம்மைப் 



பயன்படுத்திட விடாமல் தடுப்பதற்கு 



முக்கியமான காரணமே அதீத 



கடவுள் பக்தியும், அதனால் நமது 



முன்னோர்களும்,மூதாதையர்களும் 



நம்மிடம் விட்டுச் சென்றுள்ள, 



வளர்த்து விட்டுள்ள, கடவுளின் 



பெயரால், பக்தியின் பெயரால், 



மதத்தின் பெயரால், நம்மிடையே 



அந்த ஆரியகுல அந்தணர்கள் 



(வேதம் ஓதிடும் வேதியர்கள்) 



இன்றளவும் பரப்பிவருகின்ற 



முட்டாள்தனமான, அவர்கள் நமது 



இல்லத்தில் நடைபெறுகின்ற சுப 



காரியங்க்ளின்போது   அவர்களது 



திருவாயிலில் இருந்து வருகின்ற/ 



உச்சரிக்கின்ற அந்த மந்திரங்கள், 



இவைகளுக்கு என்ன அர்த்தங்கள் 



என்று உச்சரிக்கும் அந்த அந்தணரே 



பெரும்பாலோனர்கள் அறியாமல் 



இருப்பது மட்டும் அல்ல. 



அறிந்ததுபோல நடந்து நம்மிடம் 



பணத்தைப் பிடுங்கும் 



கொள்ளைக்கூட்டமாகவே அந்த 



வேதம் ஓதிடும் அந்தணர்கள் 



மாறிவிட்டதும் ஒருகாரணம். சரி ! 



இவர்கள் என்றாவது ஒருநாள் 



திருந்துவார்களா என்றால் அப்படி 



திருந்துவது என்பது இந்த 



ஜென்மத்தில் கிடையவே 



கிடையாது. 



இதற்குக் காரணம் என்ன? 



எந்தக் கொம்பன் நம்மிடம் இதற்கு 



அர்த்தம் என்ன என்று 



கேட்கப்போகின்றான் என்ற அந்த 



உயர்ந்த ஜாதிப் பிரிவினைச் 



சேர்ந்தவன், தான்என்னும் அந்த 



இறுமாப்பு, அகந்தை நிறைந்த அகப் 



பார்வையிலேயே 



வெளிப்படுத்துகின்ற ஆணவம் 



மட்டுமே ஆட்கொள்கின்ற அந்த 



ஜாதிவெறி உணர்வு, இதுபோல 



இன்னும் எவ்வளவு எவ்வளவோ 



சொல்லிக்கொண்டே போகலாம். 



ஆனால் நமது எண்ணம் அதுவல்ல. 



பேரறிஞர் தத்துவ ஞானி சாக்ரடீஸ் 



என்ன சொன்னார். சற்று சிந்தித்துப் 



பாருங்கள் அன்பர்களே:-                           



ஏற்றம் மிகு ஏதென்ஸ் நாட்டுப்               



பெருமக்களே !! 



நாற்றம் எடுத்த சமுதாயத்திலே 



நறுமணம் கமழ்விக்க ஓடி 



வாருங்கள் !! ஓடி வாருங்கள் !! என 



இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் !! 



அவர்சொன்னார்!!இவர் சொன்னார்!!



என்று அறிவிழந்து தடுமாற்றம் 



அடையாமல், எவர் சொன்ன 



சொல்லானாலும், அதனை,உனக்கே 



இயல்பான பகுத்தறிவால் நீ 



சிந்தித்துப்பார் !! அப்படி சிந்தித்து, 



சிந்தித்துப் பார்த்ததினால்தான்,இந்த 



சிலை வடிக்கும் சிற்பி, சிந்தனை 



சிற்பியாக மாற்றம் கண்டு 



உருமாறினான். வீரம் விலை 



போகாது !! விவேகம் துணைக்கு 



வராவிட்டால், தீட்டிய வாளும், 



தினவெடுத்த தோள்களில் தாங்கிய 



ஈட்டியும் போதாது தீரர்களே !! நான் 



தரும் " அறிவாயுதத்தையும் "ஏற்றுக் 



கொள்ளுங்கள் !! அறிவாயுதம் !! 



அறிவாயுதம் !! அனைத்துலகும் 



அடிபணியும் அஸ்திரம் !!                         



இப்படிஎல்லாம்வீரமிகு/




உணர்ச்சிமிகு வசனங்களை 



எடுத்துரைத்து உறங்கிக் கிடந்த 



அந்த கிரேக்க நாட்டு மக்களின் 



உணர்வுகளை , சிந்தனையை 



சிந்திக்கும் அறிவாற்றலை, தூசி 



தட்டி எழுப்பிய, அந்தத் தத்துவ 



முத்துக்கள் கொட்டித்தந்திட்ட அந்த 



சாம்ராஜ்யத்தின்முடிசூடாமன்னவன் 



சாக்ரடீசுக்கு, அந்நாட்டின் ஆதிக்க 



சக்தியின் முழுவடிவாகத் திகழ்ந்த 



அரசாங்கமும் அந்த அரசில் அங்கம் 



வகித்திருந்த துஷ்டத் தனங்களை 



மட்டிலுமே தாங்கள் அணிந்து 



மகிழ்ந்திடும் ஆடைகளாக, 



அணிகலன்களாக வாழ்ந்திருந்த 



ஏகாதிபத்திய அரசாங்கம் தந்த 



தண்டனை/பரிசு என்ன என்றால்         



" விஷம் சாப்பிட்டு மரணம் " 



அடைந்திட வேண்டும் என்ற 



கொடுமையான ஆணைதான் அந்தப் 



பரிசு அன்பர்களே !!                                     



நான் இங்கே குறிப்பிட்டு எழுதிய 



இத்தனை அறிவுசார்ந்த வசனங்கள் 



அனைத்தையும் நமக்குத் தந்தவர் 



வேறு எவரும் இல்லை அன்பர்களே. 



" ராஜா ராணி " என்ற அந்தக் காலத் 



தமிழ்த் திரைப்படத்திற்கு கதை, 



திரைக்கதை,வசனங்கள்எழுதித் 



தந்த கலிகால சிந்தனைச் சிற்பி, 



அந்த உத்தமர், முத்தமிழ் அறிஞர் 



என்று அகிலமே போற்றிப் 



புகழ்ந்திடும் அகவை 9௦ ஐ 



தாண்டிவிட்ட போதிலும் சக்கர 



நாற்காலியில் அமர்ந்து 



கொண்டாவது எனது வாழ்நாளின் 



இறுதிமூச்சு உள்ளவரை, 



தமிழனுக்கும், தமிழ் இனத்திற்கும், 



தமிழ் மொழியின் உயர்விற்கும் 



அந்தத் தமிழ் இனத்தின்பண்பாட்டின் 



முன்னேற்றத்திற்கும் பணியாற்றிக் 



கொண்டு இருக்கும் மூதறிஞர் 



கலைஞர் திராவிட முன்னேற்றக் 



கழகத்தின் தலைவர் மாண்புமிகு 



(இவருக்கு இந்த " மாண்புமிகு " 



என்னும் அடைமொழி பொதுவாக 



ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு 



கோலோச்சிக்கொண்டிருக்கும் 



முதல்வர், அமைச்சர் பெருமக்கள், 



இவர்களுக்கு மட்டுமே என்னும் ஒரு 



இலக்கணம் வகுக்கப் 



பட்டிருந்தாலும் கூட, அந்த 



வரைமுறையைத் தாண்டி, மக்கள் 



மனத்தில் நேற்றல்ல,இன்றல்ல, 



என்றென்றும் முதல்வர் என்ற இதய 



சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் 



திருக்குவளை முத்துவேலர் 



பெற்றெடுத்த அறிவுக் களஞ்சியம், 



ஆற்றலின்வடிவம், இந்தத் தமிழகம் 



கண்டெடுத்த கோஹினூர் 



தனிவைரத்திற்கு இணையான 



அறிவினைப் பெற்ற தலைவர் 



கலைஞர் அவர்களின் மருமகனும், 



மறைந்த முன்னாள் மத்திய 



அமைச்சர் " முரசொலி மாறனின் " 



கைவண்ணத்தில் எழுதப்பட்ட 



வசனங்கள்தான் நான் மேலே 



எழுதியஅந்த சாக்ரடீஸ் வசனங்கள். 



ஆக இதுபோல நம்மில் நூறு 



பேர்களில் ஏறத்தாழ 9௦ 



பேர்களுக்குமேல் சிந்தனை 



சக்தியினைச் செலவு செய்திடாமல் 



மண்ணைவிட்டு மறைந்து 



போவதற்கு என்ன காரணம் ? 



எல்லாம் இந்த சைத்தானின்முக்கிய 



ஆயுதமாம் " மதுப் பழக்கம் " இது 



ஒன்றுதான். கள்ளச் சாராயத்தினால் 



விலைமதிப்பற்ற மனித உயிர் 



பறிபோய்விடக்கூடாதே என்று1971ல் 



இந்தத் தமிழகத்தில் மதுவிலக்கு 



என்ற உயரிய கொள்கையை வேறு 



வழியேதும் இன்றி கைவிட 



வேண்டிய கட்டாயம் நிறைந்திட்ட 



காலகட்டத்தில் அதை 



கைவிட்டுவிட்டு அந்தப் பாவம் 



நிறைந்த தொழிலை தனியாருக்கு 



தந்தளித்து மதுக்கடைகளை இந்தத் 



தமிழகத்தில் ஏற்படுத்தித்தந்தவர் 



என்னவோ கலைஞர் அவர்கள்தான் 



ஆனால் அதே நேரம், இந்தப் பாவம் 



மட்டுமே நிறைந்திட்ட இந்தத் 



தொழிலினை வருமானம் மட்டுமே 



குறியாகக் கருதி அதனை 



நாட்டுடைமையாக்கி அந்தத் 



தொழிலை அரசாங்கமே ஏற்று 



அதன்மூலமாக மக்கள் 



வரிப்பணத்தைக் கொள்ளை அடித்து 



அந்தப் பணத்தின் மூலமாகவே 



அவர்களுக்கு இலவச ஆடு,மாடு, 



மிக்சி,கிரைண்டர்,மின் விசிறிஎன்று 



வழங்கி ஊரை ஏமாற்றி உலையில் 



போடுவோர்கள் அரசாங்கத்தில் 



பிறப்பிக்கப்பட்ட அந்த ஆணைகள் 



மூலம் " டாஸ்மாக் "என்ற பெயரில் 



நிறுவனம் நடத்திட ஆணை 



பிறப்பித்த புண்ணியவாளர்கள் 



இந்தத் தமிழ்நாட்டினில் தமிழர்கள் 



உள்ளவரை என்றென்றும் வாழிய 



வாழிய வாழியவே !!   



அன்பர்களே எனக்கும் வயது 6௦ஐ 



நெருங்கிக்கொண்டு இருக்கிறது. 



அடியேன் எனது ஆயுள்காலத்தில் 



இதுநாள் வரையிலும் இந்தக் 



கொடிய பழக்கத்தின் ஆரம்பப்பக்கம் 



எந்த மூலையில் இருக்கிறது என்று 



கூடஅறிந்திடாவண்ணமே உங்கள் 



அன்பன் மதுரை T.R. பாலு கடந்து 



வந்திருக்கிறான்/வாழ்ந்து 



வந்திருக்கிறான் என்பதே காலம் 



நமக்குக்கூறிடும்நல்லசெய்தியாகும்



அன்பர்களே !!                                             



இப்போது நாம் கட்டுரையில் 



குறிப்பிடப்பட்டுள்ள செய்திக்குச் 



செல்வோமா ? எனது அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !!                                             



மனித உடலில் இறைவன் அமைத்த 



மின்னணுக் கருவிகள் எவை ? 



இதுதான் இன்றைய கட்டுரையின் 



தலைப்பு.  இதற்கான விடை இதோ 



உங்களின் கனிவான கவனத்திற்கு:-  




1)  உயிர் இருக்கும்வரையிலும் 



அணைந்து விடாமலும்/பொறியைத் 



தட்டியவுடன் அது எத்தனை 



ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த 



சம்பவமாக இருந்தாலும் அதனை 



உடனே நமது நினைவிற்குகொண்டு 



வந்துநமக்கு பயனளிக்கும் கணிணி. 




2)  போடப்படும் எந்தப் பொருளையும் 



தன்னிடம் உள்ள 32 அரவைக் 



கருவிகள் மூலமாக அரைத்துத்         



தந்திடும் அரவை இயந்திரம் (MIXI)     




 3)  அப்படி இந்த மிக்சியின் மூலமாக 



அரைத்துத் தரப்பட்ட எந்தப் 



பொருளையும் 3௦ முதல் 5௦ 



நிமிடங்களுக்குள்ளாக நல்ல 



மாவுபோல அதனை திரித்து 



அளித்திடும் ஆற்றல், வல்லமை 



பெற்ற ஒரு பெரிய கலவை 



இயந்திரம் (GRINDER)                                 



 

அன்பர்களே இதற்கான, இந்தக் 



கேள்விக்கான விடைகள் இதோ 



உங்களது கனிவான பார்வைக்கு:-     



 1)  மனித மூளை !!                                       



2)   மனிதனின் வாய்தாடைப்பகுதி !!                 



3)  மனிதனின்  வயிற்றுப்பகுததி !!




அன்பர்களே !! கட்டுரை இத்துடன் 



நிறைவு பெறுகிறது !! மீண்டும்எனது 



அடுத்த வலைப் பதிவில் உங்கள் 



அனைவரையும் சந்திக்கிறேன் 



அதுவரை உங்கள் அனைவரிடமும் 



இருந்து நன்றியும் வணக்கமும் 



பாராட்டி விடை பெறுவது உங்களது 



அன்புத் தமிழ் பேசும் உடன் பிறப்பு 



 மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment