Friday, 22 November 2013

"பொய்" --இதைப் பற்றிய ஒரு சிறிய கட்டுரை-- உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !!                     



இன்றையதினம் எனதுகட்டுரையின் 



தலைப்பாக நான் தேர்ந்து எடுத்து 



இருக்கும் வாசகம் அன்பர்களே !!         



                         "  பொய்  " !!                       



இந்த வார்த்தையைப் பற்றி சொல்ல 



வேண்டும் என்றால் முதலில் நான் 



குறிப்பிட விரும்புவது யாரை எனில்



இந்த தலைப்பினைப் பற்றி யார் 



வேண்டுமானாலும், எவர் 



வேண்டுமானாலும் பேசலாம் !! 



எழுதலாம் !! அது ஏன் !! நூறுபேரை 



அழைத்து மேடை போட்டு  கூட்டம் 



கூட நடத்தலாம். (அட...இன்னாய்யா 



சொல்றே...ஒருஇழவும் புரியலையே 



எனக்கு. விவரமாச் சொல்லு தம்பி!!)



அண்ணே !! ஒரு விஷயத்தை எவர் 



ஒருவர் பேசுவதற்குத் தகுதி 



படைத்தவர் என்றால் அந்த தேர்ந்து 



எடுக்கப்பட்டஅந்தவிஷயத்தைஅவர் 



முழுவதும் அறிந்தவராக இருத்தல் 



என்பது மிக மிக அவசியமானது. 



அந்த வகையில் பார்த்தால் நாம் 



அனைவருமே நமது உலக 



வாழ்க்கையில் கிட்டத்தட்ட, 



அநேகமாக எல்லோருமே பொய் 



பேசுபவர்களாகத்தான் 



இருக்கின்றோம். அதுதான் மெய். 



எப்போது நம் தேனினும் இனியதமிழ் 



மொழியில் மெய் என்கின்ற 



வார்த்தை கண்டுபிடிக்கப் பட்டதோ 



அப்போதே இந்த பொய் என்கின்ற 



வார்த்தையும் தானாகவே 



உருவெடுத்து மெய் என்கின்ற 



வார்த்தைக்கு முன்னால் போய் 



நின்று கொண்டதாம். எனது அன்புத் 



தந்தை அடிக்கடி அதைப்பற்றிச் 



சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 



அளவுகளில் வேண்டுமானாலும் 



சற்று கூடுதல், குறைச்சல், என்ற 



மாறுபாடுகளும் அதனைப் 



பயன்படுத்துகின்ற இடங்களில் 



வேறுபாடுகளும்  இருக்கலாம். நாம் 



எல்லோரும் எல்லாரிடமும் "பொய்" 



பேசிக்கொண்டுதான் ஒவ்வொரு  



கணமும் நாளொரு மேனியும் 



பொழுதொரு வண்ணமும்  வாழ்ந்து 



கொண்டும்வளர்ந்துகொண்டும்தான் 



இருக்கிறோம் அன்பர்களே !!.             



உதாரணத்திற்கு இதோ இங்கே சில:-



தாத்தா பாட்டியிடமும், 



அப்பா அம்மாவிடமும், 



அண்ணன் அண்ணியிடமும், 



அக்கா மச்சானிடமும், 



தம்பி கொழுந்தியாளிடமும் 



தங்கை அவள் கணவனிடமும் 



ஆசிரியர் மாணவரிடமும்,     



காதலன், காதலி, இந்த  இருவரும் 



பரஸ்பரம் ஒருவர் மற்றவரிடம் ,             



கீழ்நிலைஅலுவலர்



உயர்நிலை அலுவலரிடமும், 



வணிகர்,நடிகர்,நடிகையர்,



தொழில் முனைவோர், 



இது போல பலரும், 



விற்பனைவரி அலுவலர், 



மற்றும் வருமானவரியினரிடமும், 



மக்கள், இவர்களால் வாக்குப் 



பெற்று சில எலும்புத்துண்டுகளை 



(ஆடு,மாடு,மிக்சி,கிரைண்டர்,மின்




விசிறி, இது போன்றஇலவசங்களை 



மன மகிழ்ச்சியுடன் " ஈ " என்று 



இளித்தவாயுடன்)பெற்றுக்கொண்டு, 



இளித்தவாயர்கள் என்கின்ற 



நல்லதொரு பட்டத்தையும் 



பெற்றுக் கொண்டு திரிகின்ற இந்த 



அப்பாவி மக்களிடம் பொய்சொல்லி, 



அவர்களிடம், தாங்கள், ஆட்சியில் 



இருந்தபோதும், தற்போது 



இருக்கின்றபோதும் சம்பாதித்த 



இலஞ்சப் பணத்தை கொடுத்து 



பொதுமக்களிடம்  அவர்களது 



விலைமதிப்பில்லாத வாக்குகளைப் 



பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் 



நாங்கள் ஆட்சிக்கு வந்தால்நரியைப் 



பரிஆக்குவோம், பூனையை யானை 



ஆக்குவோம், ஆட்சிக்கு வந்த 



மூன்றே மாதங்களில் இன்று 



மாநிலத்தில் உள்ள 



மின்பற்றாக்குறையை சரி செய்து, 



இந்த மாநிலத்தை மின்மிகு 



மாநிலமாக மாற்றி அண்டை 



மாநிலங்களுக்கும் உபரி 



மின்சாரத்தைத் தருகின்ற 



மாநிலமாக மாற்றுவோம், 



என்றெல்லாம் பொய் பேசி 



வெள்ளை ஆடைகளுடன், ஆனால் 



கருப்புநிற மனத்துடன் வலம் வரும் 



கேடுகெட்ட அரசியல்வாதிகள்தான் 



உலகிலேயே பொய் சொல்லி ஆட்சி/



அதிகாரம் என்கின்ற தட்டு ஏந்தி 



பிச்சை எடுப்பதில் முதல்தர 



மன்னர்கள் இவர்களைவிடவா,



வேறு உதாரணம் உங்களுக்கு 



வேண்டும் ? பொய் சொல்வதின் 



உச்சக் கட்ட செயல் பாடுகளின் 



இமயமலைச்சிகரமேஇந்தஅரசியல்



வாதிகள்தான்என்பதைநான் 



வேறுதனியாகவா மேடை போட்டு 



முழங்கிட வேண்டும் ஒன்றும் 



தெரியாத அப்பாவிகள் என்று 



பெயர்பெற்றுவிளங்கிடும்  இந்த 



பொதுமக்கள் முன்னால்  ஆளும் 



தகுதியினைப் பெற்ற, மேலும் 



இங்கே  அயோக்கியத்தனம்மட்டுமே 



முழுக்க முழுக்க நிறைந்திட்ட 



அரசியல்வாதிகளால் பொய் 



உரைக்கப்பட்டு ஏமாந்திடும் நாட்டு 



மக்கள், இவர்களும் ஒன்றும் 



புத்தரும் அல்ல ஏசுபிதாவும் அல்ல 



அனைவரும் போற்றும் 



உலகஉத்தமர்,  அஹிம்சாமூர்த்தி, 



ஜீவகாருண்ய சீலர்கள் (கலைஞரின் 



கை வண்ணத்தில் உருவாகிய 



"பராசக்தி" திரைப்படத்தில் சிவாஜி 



கணேசன் பேசிய வசனம் இது)அல்ல 



தங்களிடம் நம்பி வரும் எவரையும் 



அவர்கள் மனம் போல பேசி 



அவர்கள் நம்பிடும் வண்ணம் பொய் 



உரைத்து அவனிடம் இருப்பதை 



கொள்ளை அடிக்கும் குறு நில 



மன்னர்களும் இந்த அப்பாவி பொது 



மக்களே.இவர்களும் எவன்டா 



ஏமாந்து இருக்கின்றான் அவனிடம் 



இதுபோல் இன்னும் எத்தனை, 



எத்தனையோ வகைகளில் நாம் 



பொய் சொல்லி,ஏமாற்றி பணம் 



சம்பாதித்திடலாம் என்றுதான் 



உலகம் முழுவதும் 



வாழ்ந்துகொண்டும் 



வளர்ந்துகொண்டும் இருக்கிறார்கள் 



எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!



இவர்களைப் பற்றி பேசிக்கொண்டே 



இருக்கலாம்/போகலாம். 



அதனால் பயன்என்னசொல்லுங்கள் 



தோழர்களே. இது ஒரு குறுகிய 



தொடர் கட்டுரை நிகழ்ச்சி. இந்த 



அளவிலே இன்றைய பதிவுகளை 



நான் நிறுத்திக் கொண்டு நாளை 



மீண்டும் உங்கள் அனைவரையும் 



சந்திக்கிறேன். அதுவரை உங்கள் 



அனைவரிடமும் நன்றி பாராட்டி 



விடைபெறுவது. உங்கள் அன்புத் 



தமிழ் மொழி பேசி/எழுதி 



அனைவரிடமும் நல்ல தரமான  



பாராட்டுக்களைப் பெற்றுவரும் 



அன்புத் தம்பி மதுரை T.R. பாலு. 



வணக்கம் !! நேயர்களே !!                         



                                                       (தொடரும்)

No comments:

Post a Comment