உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
அன்பும் பண்பும் நிறைந்த உலகம்
முழுவதும் வாழ்ந்து வரும் என்
உயிரினும் மேலான அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !! உங்கள்
அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த அன்பு நிறைந்த காலை
வணக்கங்கள் உரித்தாகுக.
பொதுவாக, அன்பர்களே !! பெண்கள்
உலகின் கண்கள், இவர்கள் இல்லை
என்றால் ஆண்களின் வாழ்வினில்
இல்லை சுகங்கள். பெண்கள்தான்
வாழ்கையின் வசந்தகாலம்,
இளவேனிற்காலம்,இன்பத்தை
அள்ளித் தரும் குளிர்காலம்,
ஆண்களின் உள்ளத்து
உணர்சிகளுக்கு காமத்தீயினை
ஊட்டி வளர்ப்பதும் இவர்கள்தான்,
இவர்களை ஆண்கள் இறுகக் கட்டி
அணைப்பதின் மூலமாக எரிந்து
கொண்டு இருக்கும் அந்த தீயின்
வேகத்தை அணைப்பதும் இந்தப்
பெண்குலத்திலகங்கள்தான், என
இப்படி எல்லாம் நாம் அனைவரும்
பெண்குலத்தின் பெருமைகளை
பேசிக்கொண்டு திரிந்தாலும்,
உண்மையில் இவர்கள் எப்படி?
இவர்களால் ஆண்களுக்கு என்ன
நன்மை, அதில் உள்ளது எவ்வளவு
உண்மை, பெண்களின் கண்களில்
முழுக்க முழுக்க நிறைந்திருப்பது
கயமை, பொய்மை,உண்மை அன்பு
இல்லாமை, இவ்வாறெல்லாம்
ஆண்கள் காலம் முழுவதும்
பேசிக்கொண்டு அலைந்தாலும்
அந்த இரவு என்று ஒன்று
வந்துவிட்டால் இவர்கள்,
இவர்களாகவே, வலுவில் தேடிச்
சென்று இணைந்துகொள்வதும்
இந்தப் பெண்களிடம்தான்.
இதைத்தான் காவியக் கவிஞர்வாலி
ஒரு பாடலில் மிக அழகாக எடுத்துச்
சொல்லி இருக்கிறார்.
"அரச கட்டளை"என்ற கருப்பு
வெள்ளைத் திரைக் காவியத்தில்
வரும் பாடல் இதோ உங்கள்
கண்களுக்கு விருந்தாக
படைக்கிறேன்.
வேட்டையாடு விளையாடு !!
விருப்பம்போல உறவாடு!!
வீரமாக நடையைப்போடு!!
நீவெற்றி என்னும் கடலில்ஆடு !!
நேர்மை உள்ளத்திலே !!
நீந்தும் எண்ணத்திலே !!
தீமை வந்ததில்லை !!
தெரிந்தால் துன்பமில்லை !!
"தேவை அங்கிருக்கு" !!
"தீனிஇங்கிருக்கு"!!
செம்மறி ஆடே நீ சிரமப்பாடாதே !!
செம்மறி ஆடே நீ சிரமப்படாதே !!
ஆக இந்தப் பெண்கள் இல்லாமல்
ஆண்களின் வாழ்கையில் சுகம்
என்பது இல்லவே இல்லை.இதுதான்
மனித வாழ்கையின் யதார்த்தம்.
ஆனால் சுகத்தினை அனுபவிக்கத்
துடிக்கும் இந்த ஆண்களின் மனம்
சுமை என்றவுடன் காத தூரம் ஓடி
ஒளிந்து போவதுதான்
விந்தையிலும் பெரிய விந்தை.
ஆண்டவனின் படைப்பினில்
எல்லாமே நாணயத்தின் இரண்டு
பக்கங்களாகத்தான் எல்லாம் வல்ல
இறைவன் மனிதகுல
வரலாற்றினில் அனுபவித்திட
படைத்திருக்கிறான் என்பதே
உண்மை. இதை எந்த ஒரு
ஆண்மகன் உணர்ந்து கொண்டு
நடக்கிறானோ அவன் வாழ்வினில்
என்றுமே நடப்பது நன்மை. சுகம்
என்றொரு பக்கத்தைப் படைத்திட்ட
இறைவன்தான் சுமை என்று மற்றும்
ஒரு பக்கத்தையும் ஆண்களை
மனத்தில் ஏற்று அனுபவித்திடப்
படைத்திருக்கிறான்.
இப்போது நாம் கட்டுரையினுள்
செல்வோமா நேயர்களே !!
கவிஞர்களின் கண்ணோட்டத்தில்
"பெண்கள்"..... அன்றும் !! இன்றும்!!...
இதுதான் நான் இன்று உங்களுக்கு
வழங்கிட இருக்கும் கட்டுரையின்
தலைப்பு. அன்பர்களே !!
இறைவனால் உருவாக்கப்பட்டஇந்த
பூமியில், கவிஞர்கள் என்னும் ஒரு
பிரிவினர் உருவாக்கப்படுவதில்லை
பிறக்கின்றார்கள் என்பதே உண்மை.
எவன் ஒருவனுக்கு கவித்துவம்
வரும் என்றால் திரைப்படத்
துறையைப்பொறுத்தவரையில்
பெண்களின்மேல் அதீத ஆசையும்
விருப்பமும் வெறித்தனமான காம
உணர்வுகளும் இச்சையும் கொண்ட
ஒருவனுக்குத்தான் ஏனைய
மற்றவர்களைவிடவும் கவிதை,
மழை வானத்தைப் பொத்துக்
கொண்டு கொட்டுவதுபோல
கவிதைகள் அவனது மனத்தை
முட்டிக்கொண்டு வருவதுதான் நாம்
இதுவரை கண்கூடாகப்
பார்த்துக்கொண்டு வரும் உண்மை
நிகழ்வுகள். இதற்கு, இந்தக்
கருத்துக்கு சமீபத்திய உதாரணம்
கவியரசர்கண்ணதாசனைவிடவேறு
யாரும் தேவைப்படமாட்டார்கள்
அன்பர்களே !!அவருக்கு அந்த
அளவுக்கு அழகிய பெண்களின் மீது
அளவிட முடியாத ஆசையும்அன்பும்
இருந்ததுதான் அன்பர்களே நாம்
வரலாற்றில் கண்டிட்ட உண்மை.
இந்தக் கவிஞர்கள் அந்த
அழகுப் பெண்களை நாடி அவர்கள்
மடிமீதுகுடியேறி வாழ்ந்திருந்தாலும்
அவர்கள் இந்தபெண் இனத்தைத்
தாக்குவதில் தவறுவதே இல்லை.
அந்தக்கால கவிஞர்திலகம் தஞ்சை
இராமையா தாஸ் அவர் எழுதிய
பாடல் ஒன்று "தூக்குத்தூக்கி" என்ற
திரைக் காவியத்தில் இடம் பெற்ற
அந்தப் பாடல் இப்போது உங்களின்
கனிவான கவனத்திற்கு:-
பெண்களை நம்பாதே !! கண்களே!!
பெண்களை நம்பாதே !!
வீண்பெருமைகாட்டிசிறுமைஆக்கும்
பெண்களை நம்பாதே !! கண்களே !!
பெண்களை நம்பாதே !!
மண்கலம்போலமற்றவர்தொட்டால்
மாசுறும் பெண்மை !! என்றே
பேசிடும் உண்மை !!
கெட்டு வெண்கலம் போல எவர்
தொட்டாலும் விளக்கி எடுத்து
விரும்பும் தன்மை !!
பெண்களை நம்பாதே !! கண்களே !!
பெண்களை நம்பாதே !!
(தொகையறா)
ஒய்யாரக் கொண்டையிலே !!
தாழம்பூவாம் !!
அதன் உள்ளே இருக்கிறது !!
ஈரும் பேனாம் !!
இதை மெய்யாய் உணர்ந்தவனே !!
புத்திமானாம் !!
மேனி மினுக்கும் பெண்களையே !!
பார்த்திடானாம் !!
கண்டவரோடு கண்ணால் பேசிக்
காமுறும் மாது !!இந்த பூமியின்மீது!!
" கொண்ட கணவன் தன்னைக் "
"கழுத்தறுப்பாள் --காரிகை --உலகில்
"தளுக்குக் காட்டும் "
பெண்களை நம்பாதே !! கண்களே !!
பெண்களை நம்பாதே !!
வீண்பெருமைகாட்டிசிறுமைஆக்கும்
பெண்களை நம்பாதே !! கண்களே
பெண்களை நம்பாதே !!.............................
பெண்களை நம்பாதே !!
அன்பர்களே !! என்னே
யதார்த்தங்கள்/ உண்மைகள்
நிறைந்த தத்துவப் பாடல் இது.
பெண்களின் உண்மைத் தோலை
உரித்துக்காட்டும் பாடல்.
கவிஞர் தஞ்சை இராமையாதாஸ்
காலத்திற்குப் பிறகு வந்த கவிஞர்
கண்ணதாசன் அவர் பார்வையில்
பெண்கள் எப்படி இருந்தார்கள்
என்று இப்போது பார்ப்போம் எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
"ஹலோ !! மிஸ்டர் ஜமீந்தார் !!என்ற
திரைப் படத்தில் கவியரசர் என்ன
சொல்லியுள்ளார் பெண்களைப்
பற்றி என்பதை நாம் இப்போது
பார்ப்போமா !! நேயர்களே !!
இளமைக் கொலுவிருக்கும் !!
இனிமை சுவை இருக்கும் !!
இயற்கைமணமிருக்கும்பருவத்திலே
பெண் இல்லாமல் சுகம் இல்லை
உலகத்திலே !!
அணைத்து வளர்ப்பவளும்
தாயல்லவோ!!
அணைப்பில் அடங்குவதும்
அவளல்லவோ!!
கவிஞர் பாடுவதும் !!
கலைஞர் நாடுவதும் !!
இளைஞர் தேடுவதும் !!
பெண்ணல்லவோ !!
பெண் இயற்கையின் சீதனப்
பரிசல்லவோ !!
(இளமைக்கொலு)
பொன்னும் பொருளும் வந்து மொழி
சொல்லுமா !!
ஒரு பூவைக்கு மாலையிடும் மணம்
தருமோ !!
இன்று தேடி வரும் !!
நாளை ஓடி விடும் !!
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா!!
எந்த செல்வமும் பெண்மையின்
சுகம் தருமா !!
(இளமைக்கொலு)
கவியரசரின் பார்வையில் 1965ம்
ஆண்டில் இப்படித் தோன்றிய இதே
பெண்கள்தான் இவர்வாழ்ந்த 1961ம்
ஆண்டு காலத்தில் இவரே எழுதிய
பாடல் "பாக்கியலட்சுமி " திரைப்
படத்தினில் மெல்லிசை மன்னர்கள்
விஸ்வநாதன்--இராமமூர்த்தி
இருவரின் தேனினும் இனிய இசை
அமைப்பினில் வெளிவந்த
பாடல்தான் இதோ:-
பார்த்தீரா அய்யா!! பார்த்தீரா !!
இருபது வயது !! இளகின மனது!!
உருவத்திலே அவள் நடுத்தர மாது!!
பார்த்தீரா !! அய்யா!! பார்த்தீரா !!
வெங்காயச் சருகுச் சேலை !!
வீட்டு வேலை தெரியவும் இல்ல !!
நடையைப் பாத்தா நாட்டியம் போல
இருக்கம்மா !!
நல்லா இருக்கிற மனசுகள் எல்லாம்
கெடுதம்மா !!
என்றும்கூட கவியரசரே எழுதி
உள்ளதை என்னால் மறந்துவிட
முடிய வில்லை.
நடப்பு நூற்றாண்டு வாழ்ந்திருந்த
கவிஞர்கள்தான்இப்படி பெண்களை
பற்றிக் குறிப்பிட்டு இருந்தாலும்
சங்க கால இலக்கிய நூலான
ஐம்பெரும் காப்பியங்களுள்
ஒன்றான " சீவக சிந்தாமணி "யில்
பெண்களைப் பற்றி குறிப்பிட்டு
இருப்பது என்னவோ, இப்படித்தான்
அன்பர்களே !!பாடல் இதோ உங்கள்
கனிவான கவனத்திற்கு !!
வன்மனவணிகர்தம்மைப்படைத்து !!
வானரங்கள்என்செய்யப்படைத்தாய்
பெண் என்னும் இனந்தனைப்
படைத்துப்பின் " பேய்களை " என்
செய்யப்படைத்தாய் !!
என்றுதான் அங்கே பெண்களைப்
பற்றிக் குறிப்பிடப் பட்டு இருக்கிறது
அன்பர்களே !!
அதாவது இந்தப் பாடலின் பொருள்
என்னவென்று கேட்டால் :-
பேய்கள் செய்திடும் அனைத்து
வேலைகள் எல்லாவற்றையும்தான்
இந்த பெண்கள் செய்து
விடுகிறார்களே!! அதற்கு அப்புறம்
"பேய்"என்ற இனத்தைத்தனியாக
ஏன் படைத்தாய் !! என்பதுதான்
இந்தப் பாடல் வரிகளின் பொருள்.
ஆக காலப் பரிணாம
இடைவெளிகளில் கவிஞர்கள்
ஒவ்வொருவரும் அவரவர்
கருத்துக்களைத் திரைப்படப்
பாடல்கள் மூலமாக எவ்வாறு
எல்லாம் தெரிவித்து இருந்தார்கள்
என்பதனை நாம் பல்வேறுபாடல்கள்
மூலமாக அறிந்தோம். கருத்துக்கள்
தெரிவிப்பது என்பது
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட
கருத்து சுதந்திரம். ஆனால் அப்படி
அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்
மட்டுமே சட்டம் அல்ல. ஆனால்
சரித்திர வரலாற்றினில் பெண்கள்
எந்த அளவுக்கு முன்னிலை வகித்து
வாழ்ந்திருந்தனர் என்பதற்கும் நான்
இங்கே சிலபலசான்றுகளை உங்கள்
முன்பாக தெரிவித்திடக் கடமைப்
பட்டிருக்கிறேன் அன்பர்களே:-
1) இந்தியாவின் முதல்
இசைக்குயில் பாரத இரத்னா விருது
பெற்ற திருமதி M.S.சுப்புலட்சுமி.
2) அமெரிக்க வல்லரசின்
ஏகாதிபத்திய முத்திரையைஎதிர்த்து
குரல்கொடுத்த முன்னாள் பாரதப்
பிரதமர் அன்னை இந்திராகாந்தி.
3) இந்தியாவின் முதல் பெண்
போலீஸ் D.G.P. காஞ்சன் சௌத்திரி.
4) உலகத் தடகளப் போட்டியில்
பதக்கம் வென்ற முதல் இந்தியப்
பெண் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ்.
5)சர்வதேச விருதுபெற்ற முதல்
பெண் திரைப்பட இயக்குனர்
மீராநாயர்.
6) இந்தியாவின் முதல் செஸ்
கிராண்ட் மாஸ்டர் விஜயலட்சுமி.
7) எவரெஸ்ட் சிகரத்தை
துணிச்சலுடன் எட்டிய வீராங்கனை
பச்சேந்திரி பால்.
8) பாரத இரத்னா விருது பெற்ற
முதல் இந்தியத் திரைப்படப்
பின்னணிப் பாடகி லதாமங்கேஷ்கர்.
9) புக்கர் பரிசு பெற்றக் முதல்
இந்தியப் பெண் அருந்ததி ராய்.
1௦) உலக அழகி பட்டம் வென்ற
முதல் இந்தியப் பெண் ரீட்டா பரியா.
11) இந்தியாவின் முதல் கார் பந்தய
வீராங்கனை நாவாஸ் சாந்து.
12) இந்தியாவின் முதல் பெண் ஜெட்
கமாண்டர் சௌதாமினி தேஷ்முக்
13) 46 ஆண்டுகள் தொடர்ந்து
எம்.எல்.ஏ. பதவி வகித்த இந்தியப்
பெண்மணி கௌரியம்மாள்.
14) வெளிநாடு பல சென்று
இந்தியாவின் பரத நாட்டியக்
கலையின் பெருமையை உலகுக்கு
வெளிக்காட்டிய இந்திய நாட்டியப்
பேரொளி பால சரஸ்வதி.
15) உலகின் சிறந்த ஆயத்த ஆடை
வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார்
விருது பெற்ற இந்தியப் பெண் பானு
ஆதித்யா.
ஆக இதுபோல பல்வேறு
துறைகளில் புரட்சிகள் பல செய்து
அகிலமே வியக்கும் வண்ணம்
தலைவியாக செயல் பட்டவர்கள்
எவரும் தங்களைத் தாங்களே
" புரட்சித் தலைவி " என்று
அழைத்துக்கொண்டதாக வரலாறு
இல்லவே இல்லை. முன்னாளில்
வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஒன்றினில் ஒரு பாடல் வரும்அந்தப்
பாடல் வரிகள்தான் இப்போது எனது
நினைவினில் வருகிறது.
தரையைப் பார்த்து இருக்குது
விளைஞ்ச பயிறு !!
தன் நிலையை மறந்து ஆடுது
இங்கே பதறு!!
அதுபோல் அறிவு உள்ளது அடங்கிக்
கிடக்குது வீட்டிலே !!
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம்
பண்ணுது வெளியிலே !!
என்ற பட்டுக்கோட்டை
கல்யானசுந்தரத்தின் காவியப்
பாடலுடன் எனது கட்டுரையை நான்
இங்கே முடித்துக்கொள்கிறேன்
எனதுஅன்புத்தமிழ்உடன்பிறப்புகளே
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment