Thursday, 13 June 2013

கணவன் மனைவியின் அடிமையாவதும் ஏன்? எதிர்க்கட்சி M.L.A.முதல்வரை சந்திப்பதும் ஏன் ?(கட்சித் தலைமைக்கு தெரிவிக்காமல்)




உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!  


தமிழனாக வாழ்ந்திடுக!!                           


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழர்கள்நடுவேஉரையாடும்போது!


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


இனிய தமிழ் மக்களே!!



இதோ உங்கள் மதுரை T.R.பாலுவின் 


"எண்ணச் சிறகுகள்"வலைப்பதிவு 


மூலமாக வரும் வணக்கமும் உளம் 


கனிந்த வாழ்த்துக்களும்!!                             



ஒவ்வொரு நாளும் உள்ளத்தில் 


தோன்றும் கருத்துச் சுரங்கங்களில் 


நான் கண்டெடுக்கும் கனிம வளம் 


நிறைந்த சிந்தனைக் குவியல்களை 


உங்களோடு பகிர்ந்து கொள்வதில் 


மதுரை T.R.பாலு அடைந்திடும் மன 


மகிழ்ச்சி அதற்கு எல்லை என்பதே 


இல்லை என் அன்புத் தமிழ் நெஞ்சங் 


-களே!!                                                                     



அந்த வகையில் இன்று என் உள்ளம் 


என்னும் சுரங்கத்தில் கண்டெடுத்த 


சிந்தனைதான் தலைப்பாக உங்கள் 


அனைவரின் சிந்தனைக்கும் நான் 


வழங்கும் ஓர் சீர்திருத்த மருந்தாக 


உதித்தது. படைப்பின் தலைப்பு:-                 


"கணவன்மனைவியின் அடிமையாக 


ஆவதும்  ஏன்"?                                                         


"எதிர்க்கட்சி M.L.A.முதல்வரை மனு 


கொடுத்து சந்திப்பதும் ஏன்"?                   


நல்லதொரு சிந்தனைச் செறிவூட்டப் 


பட்ட கருத்துத்தான் என் அருமைத் 


தமிழ் நெஞ்சங்களே.                                   


அன்பர்களே !! பொதுவாக தமிழில் 


ஒரு பழங்கால சொல் வழக்கு ஒன்று  


உண்டு. அது என்னவென்றால் :-           


ஆதிஉறவு அடியோடு அத்துப்போகும்  


"பொஞ்சாதி" உறவு கொழுந்துவிட்டு 


எரியும்!! (அவை கண்ணியம் கருதி 


ஒரே ஒரு வார்த்தையை மட்டும் 


நான் இங்கே மாற்றி அமைத்து 


உள்ளேன்)                                                              


இங்கே நீங்கள் ஒரு கருத்தை 


உங்கள் நெஞ்சத்தில் பதிய வைத்துக் 


கொள்ளவேண்டும் அன்பர்களே !! 


அது என்னவென்றால் ஒரு மகனை 


பத்துமாசம் பாசத்தோடும் நேசத்தோ 


-டும் சுமந்து பெற்ற தாய் அவனை 


சீரோடும் சிறப்போடும் எந்தவித 


மனக்குறையும் இல்லாமல் வளர்த்த, 


படிக்க வைத்து, பாட வைத்த தந்தை, 


கூடப் பிறந்த பிறப்புகள்,அண்ணன், 


தம்பி, அக்கா,தங்கை, மாமா, மச்சான்  


இதுபோன்றஅனைத்துஆதி உறவு   


களும் எப்போது கசந்துபோக ஆரம்பி 


கிறது என்று சொன்னால், இந்த 


மகன் பருவ வயதினை அடைந்து 


விட்டானே இவனுக்கு நேரத்தில் 


நாம் செய்யவேண்டிய கடமையை 


செய்திட வேண்டுமே என்று 


நினைத்த தாயும்,தந்தையும் 


இவனுக்கு நல்ல ஒரு இடத்தில் 


மணம் பேசி முடித்து வீட்டுக்கு வலது  


கால் எடுத்துவைத்து மருமகள் என்ற 


ஒரு"தேவதை" வருகிறாளோ,அவள் 


தங்கள் மகனோடு என்று இரண்டற 


கலக்கின்றாளோ அத்தோடு முடிந்து 


விடுகிறது அன்பர்களே. அவளது 


தலையணை மந்திரத்திற்கு மயங்கா 


மனிதன் இந்த மண்உலகினில் 


யாரும்இல்லை.இக்கருத்தைத்தான் 


மையமாகவைத்து என் கவியரசன் 


கண்ணதாசன் "நிச்சய தாம்பூலம்" 


என்ற  படத்தில் நடிகர் திலகம் 


சிவாஜி கணேசன் நடித்த அந்த 


படத்தில் சமீபத்தில் மறைந்த மதுரை 


மண்ணின் மைந்தன் T.M.சவுந்திர    


ராஜன் ஒரு பாடலில் :-                                   


தனியாய் இருந்த மனிதன் மனதில் 


சஞ்சலம் இல்லையடா !!                     


இன்னொரு உயிரை தன்னுடன் 


சேர்த்தான் என்றும் தொல்லையடா!! 


ஆசை,பாசம்,காதலில் விழுந்தான் 


அமைதியைக் காணவில்லை!! 


அழுதான்!!தவித்தான்!! துடித்தான்!! 


நெளிந்தான்!!


யாருக்கும்லாபமில்லை !!


என்ற அந்தக் கருத்தாழம் மிக்க 


பாடல் இன்றைக்கு ஏறத்தாழ 5௦ 


ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் 


ரீங்காரம் இட்டுக்கொண்டு உள்ளது 


என்றால் அந்தக் காலப் பாடல் 


அப்படிப்பட்ட சாகா வரத்தை 


கொண்டது.ஆக இந்த மனைவியிடம்  


அந்த அளவு மயக்கும் சக்தியை 


இறைவன் வழங்கி இருப்பதினால் 


கணவன்மனைவியின் அடிமையாக 


ஆகின்றான். (இத்தோடு தலைப்பில் 


குறிப்பிட்டுள்ள உள்ள பகுதி எண் 1 


நிறைவு பெறுகின்றது)                               


பகுதி எண் :-2.                                                   


எதிர்க்கட்சி M.L.A.கட்சித் தலைமை 


யின் அனுமதி பெறாமல் மாண்புமிகு 


முதல்வரை தொகுதி மக்கள் நலத் 


திட்டப் பணிகள் என்ற முகமூடி 


அணிந்தபடி மனு கொடுக்கச் 


செல்வதும் சந்திப்பதும் ஏன்?                  


அன்பர்களே!! 



இந்த தலைப்பிற்கும் நமது 


முன்னோர்கள் ஒரு தமிழ் சொல் 


வழக்கு ஒன்றினை நமக்குத் 


தந்துதான் சென்றுஇருக்கின்றார்கள். 


அதுதான் "முற்பகல் செய்யின்    


பிற்பகல் விளையும் " என்று.            


அன்பர்களே !! நான் எப்போதும் ஒரு 


கருத்தை என்னைச் சந்திக்க வரும் 


நண்பர்கள் அனைவருக்கும் 


சொல்வது உண்டு. அது என்ன 


என்றால் தயவு செய்து வீட்டுக்கு வீடு  


திருக்குறள் புத்தகம் ஒன்றினை 


(நல்ல அறிஞர் தரும் பொருள் 


விளக்கஉரையோடுகூடியது) வாங்கி 


வைத்து நீங்களும் படியுங்கள் 


உங்கள் எதிர்கால சந்ததியினரையும்  


படித்திட சொல்லுங்கள் என்று. யார் 


கேட்கிறார்கள்? நமது பேச்சை!! அந்த  


திருக்குறளில் வான்புகழ் அய்யன் 


திருவள்ளுவர் "நட்பாராய்தல்" 


எனும் தலைப்பினில் ஒரு அதிகாரம் 


ஒன்றினைப் படைத்து அதில் 1௦ 


குறளும் எழுதிச் சென்றுள்ளார். 


அதில் ஒரு குறள் இந்த தலைப்பு 


பகுதி எண்:-2 க்குபதிலாக 


அமையும்எனநான் எண்ணுகிறேன். 


இப்போது குறளைப் பாப்போம்.                      


குறள் எண்:-  792.                                             


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான்                                                                                                                                                                                 


கே                       கேண்மை நடைமுறை 


தான்சாந் துயரம் தரும்.. .. .. .. .. ... ... ... ..


இந்தக் குறளுக்கு பொருள் என்ன 


என்று கேட்டால் அன்பர்களே!!            


ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் 


கொள்ளாதவனுடைய நட்பு 


இறுதியில் தான் "சாவதற்குக்"   


காரணமான துயரத்தை உண்டாக்கி 


விடும். இது வள்ளுவன் வாக்கு.        


எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு 


விஜயகாந்த் எங்கள் மதுரை ஊரைச் 


சேர்ந்தவர். அரசியலில் அவர் ஒரு 


முதல்வகுப்பு படிக்கும் மாணவன். 


கடந்த தேர்தலில் யாருடன் கூட்டணி  


வைத்துக்கொள்ளக் கூடாதோ அந்த 


கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட 


உறவு/நட்பு இன்றைக்கு என்ன 


ஆச்சு? இதுவரை 7 M.L.A.க்களுக்கு  


வலைவீசப்பட்டு அவை அனைத்தும் 


இப்போதுவலையில் மாட்டிக் 


கொண்டு  "சந்தோஷமா" ஆளும் 


கட்சியின் ஆதரவு இருக்கு.இன்னும் 


எத்தனை மீன்கள் எப்பெப்ப 


வலையில்மாட்டுமோ? அவர்கள் 


தந்த ...பெரும்...உதவி...காவல் துறை 


தயவும் இருக்கு. ஆனா விசுவாசம் 


அதுஎங்கேஇருக்கு?வேதக்கோவில் 


அங்கு  மட்டுமே இருக்கு. ஆக இன்று 


எங்க ஊர்க்காரர் ரொம்ப மன 


வேதனை ,மன உளைச்சல் 


இதனோடு வாழ்ந்து வருகிறார். இந்த 


சூழ்நிலை அவருக்கு தேவையா. 


எல்லாம் தலை எழுத்து. யார் மாற்ற 


முடியும்.அனுபவிக்க வேண்டிய 


அனைத்தையும் மனுஷன் 


அனுபவித்துத் தானே ஆக வேண்டும்  


ஆராயாமல் கொண்ட நட்பு தந்த 


பரிசுதனை பார்த்தீர்களா?


அன்பர்களே. நீங்கள் அனைவரும் 


எதிர்காலத்தில் இதுபோன்ற 


ஆசாமிகளுடன் நட்பு செய்திடாமல் 


நல்ல அறிஞர்களுடன்,"கலைஞர்" 


களுடன் நட்புசெய்து வாழ்வில் 


உயர்ந்திட  வேண்டுமாய் 


கேட்டுகொண்டு நன்றி பாராட்டி 


விடை பெறுகிறேன். 


வணக்கம்.


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment