Friday, 21 June 2013

எது முக்கியம் ? ஒரு உண்மை நிலவரம் !!




உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும் சகோதர சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும்போது !!             



*                        "எது முக்கியம்" ?


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலாக நான் போற்றி 


வணங்கிவரும் என் அன்பு உடன் 


பிறப்புக்களே!!


உங்கள்அனைவரையும்  வணங்கி 


மகிழ்கிறேன். நிற்க !!                    


இன்றைய தினம் ஒரு சமுதாய 


சிந்தனைக் கண்ணோட்டத்துடன் 


கூடிய ஒரு விஷயத்தை நான் 


உங்களில் அனைவருடன் 


விவாதித்திட  எண்ணி இந்த 


கட்டுரைக்கு " எது முக்கியம் " என்று 


தலைப்பு கொடுத்து உங்கள் 


அனைவரின் கவனத்தையும் ஒரு 


சேர என்வசம் கொண்டு வருவதில் 


மட்டட்ற  மகிழ்வு பெறுகிறேன்.                   


பொதுவாக மனித உடற்கூறு 


அமைப்பின்படி 35 வயதிற்கு மேல் 


உடல் எடை கூடிடும் வாய்ப்புகள்  


அது ஆணாக இருந்தாலும் சரி, 


இல்லை பெண்ணாக இருந்தாலும் 


சரி தொடர்ச்சியாக உடற்பயிற்சி 


செய்திடும் பழக்கம் இல்லாத 


நபர்களுக்கு  உட்கார்ந்துகொண்டே 


வேலைசெய்திடும் மாந்தர்களுக்கு 


இந்த உடல் எடை கூடுவது என்பது 


தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி 


எடை கூடுவதால் என்னென்ன 


பாதிப்புகள் வரும் என்று கேட்டால் 


வேகமாக நடக்க முடியாமை, மூச்சு 


வாங்கிடும் வண்ணம் இயல்பு, இந்த 


எடைகூடுவது பல நோய்களுக்கு 


தாய் போன்றது. ஆம்.  அன்பர்களே !!


உயர்   இரத்த அழுத்தம்,சர்க்கரை 


நோய், இரத்த கொழுப்பு அதிகம் 


ஆகுதல், அதனால் ஏற்படும் இதய 


பாதிப்பு இது போன்ற இத்யாதி, 


இத்யாதி, வியாதிகள் இந்த எடை 


கூடுவது என்பதாலேயே வருகிறது 


என்பதனை மருத்துவ ஆராய்ச்சி, 


மற்றும்அதன்தொடர்அறிக்கைகள் 


நமக்கு அறிவுறுத்துகின்றன.சரி 


அப்படி என்றால் இந்த எடை 


அதிகரிப்பை தடுத்திட நாம் என்ன 


செய்திட எண்டும் என வினவி நாம் 


மருத்துவர் ஆலோசனை கேட்டால் 


அவர் நமக்கு தரும் முதல் அறிவுரை 


என்ன வென்றால்:-                                              


DOCTOR:-  Mr. சுரேஷ். என்ன இது ? 


உடம்பா இது. உம்.. ஏன்? இப்படி.. உம்.. 


ஏன்?இப்படி.. பெருக்க விட்டுட்டீங்க? 


ஆமா. நீங்க என்ன வேலை 


பார்க்குறீங்க ? சும்மா just தெரிஞ்சுக் 


கிறதுக்குத்தான்  கேட்டேன் ?                       


சுரேஷ் :-  டாக்டர் சார். நம்ம வேலை.. 


டாக்:-  உம்..தப்பு..தப்பு.. உங்க வேலை 


சுரேஷ்:- உம். ஆமா இல்லை. என் 


வேலைபெரிய வேலை.                                      


டாக்:- அப்படி என்ன பெரிய வேலை? 


சுரேஷ்:- சாப்பிட வேண்டியது..தூங்க 


வேண்டியது. திருப்பி சாப்பிட   


வேண்டியது.. அப்புறம் ..                                      


டாக்:- நிறுத்து..நிறுத்து.. நானே 


சொல்றேன்..திருப்பி சாப்பிட  


வேண்டியது..தூங்க வேண்டியது .. 


அதைத்தானே சொல்ல  வந்தாய் என் 


சுந்தர சுரேஷ்.                                                        


சுரேஷ்:- இல்லை வெறும் சுரேஷ்.. 


டாக்:-   இதுல ஒன்னும் குறைச்சல் 


இல்லை. Mr. சுரேஷ் இந்த மாதிரி 


இன்னும் ஒரு6மாசம் இருந்தீங்க 


அப்படின்னு வச்சுக்குங்க?                         


சுரேஷ்:-  என்ன ஆகும் டாக்டர். 


எனக்கு மெடல் போடுவாங்களா.   


டாக்:-  இல்லை Mr. சுரேஷ் உங்க 


படத்துக்கு மாலை போடுவாங்க.   


சுரேஷ்:-  டாக்டர்.என்ன சொல்றீங்க? 


டாக்:-உக்கும்..இதுலே ஒன்னும் 


குறைச்சல் இல்லை. துன்றதை 


மட்டும் குறைச்சுறாதே !!                           


சுரேஷ்:- டாக்டர். உங்களுக்கு ஏன் 


இப்படி பொறாமை. முடிஞ்சா 


நீங்களும் சாப்பிட்டு பாக்க 


வேண்டியது தானே!! 


ஏன்னா.உங்களாலே அது முடியாது. 


டாக்:-  முடியாமலேயே போட்டும். 


Mr.சுரேஷ். நாம என்னா சினிமா 


படமா எடுத்துட்டு இருக்கோம்? நான் 


சொல்றதை ரொம்ப கவனமா 


கேளுங்க.தினசரி காலையிலே 5 


மணிக்கு எல்லாம் எந்திரிக்கனும். 


எந்திரிச்சு...                                                            


சுரேஷ்:- டாக்டர். ப்ளீஸ். கொஞ்சம் 


நிறுத்துங்க. 5 மணிக்கு எழுந்திரிச்சு 


நான் என்ன 1௦௦ வயசா உசுரோட 


இருக்கப் போறேன்?                                       


டாக்:- யூ. fool. நான் சொல்லப்போற 


ட்ரீட்மெண்ட் 1௦௦ வயசு இருக்கறது 


அதுக்கு இல்லை.                                        


சுரேஷ்:- பின்ன, எதுக்கு?                                


டாக்:-  யாரையும் படுத்தாம போய் 


சேற்றதுக்கு.                                                       


சுரேஷ்:- டாக்டர். அப்ப என்னை சாக 


சொல்றீங்களா?                                                   


டாக்:- இப்படி தின்னு தின்னு நீ 


உசுரோட இருக்கறதுக்கு பேசாம 


செத்துரு. எல்லோருக்கும் நல்லது. 


அட பேசாம இருப்பா!! சாவ்ரதுக்கா 


அல்லாரும் டாக்டர்ட்ட வருவாங்க?


சுரேஷ்:- பிறவு. வேற எதுக்கு.                 


டாக்.:-  சுரேஷ்.நான் சொல்றதை 


கேளுங்க 5 மணிக்கு எழுந்து ஒரு 5 


கிலோ மீட்டர் கையை காலை வீசி 


நடங்க பாப்போம்.                                               


சுரேஷ்:- நடந்தா என்ன வரும் 


டாக்டர்?.                                                                         


டாக்:- என்ன வராதுன்னு கேளு 


தம்பி. முதல்லே உங்களுக்கு நோய்  


வராது. அதனாலே நீங்க என்ன 


செய்றீங்க தினசரி காலையிலே 5 


மணிக்கு எழுந்து நடங்க. மாத்திரை 


மருந்து எல்லாம் இதுக்கு 


அப்புறமேல்தான்.என்ன நான் 


சொல்றது புரியுதா?           இந்த மாதிரி 


சொன்னதும் பொதுவா 1௦௦க்கு 9௦ 


பேர் புதுமாடு குளிப்பாட்டினஅந்த 


கதை போல 2 நாள் இல்லை ஒரு 3 


நாள் நடப்பாங்க. அதோடு முடிந்தது. 


இப்போது நாம் தலைப்பு 


சம்பந்தப்பட்ட விஷயத்திற்குள் 


போவோம்.                                                         


எது முக்கியம்?



அன்புமிகு நண்பர்களே. கடனேன்னு 


நடை பயிற்சி முடிச்சுட்டு வந்து 


9இட்லி,2கரண்டி பொங்கல்,3 


மெதுவடை, கேசரி,கறிக்கொழம்பு.



இதுபோல சாப்பிடுவதற்கு பேசாமல் 


மவுன விரதம் இருந்திடுவோம் 


அன்பர்களே !! எடையும் குறையும். 


மக்கள் மத்தியில் மதிப்பும் உயரும். 


என்ன சரியா? தோழர்களே !!


தோழியர்களே !!நீங்கள்தான் இந்த 


நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கு . 


உங்கள் பாதார விந்தங்களை 


வணங்கி நான் உங்களின் 


ஆசிகளோடு எனது எழுத்துப் 


பணியும் இணைந்து உங்களின் 


வருங்காலம்  ஒரு செம்மையான 


பிறருக்கு வழிகாட்டிடும்  ஒரு 


நல்ல பொதுநலத்தோடு கூடிய 


அமைதி நிறைந்த வாழ்க்கையாக 


விளங்கிட வேண்டும்.அதற்கு 


நீங்கள் உடல் நலத்தோடு 


இருந்திடல்  வேண்டும். உங்கள் 


உடல் எடை நன்றாகக் குறைத்திட 


வேண்டும். உணவில் கட்டுப்பாடு 


மிக,மிக அவசியம் என்பதை 


நினைவில் நிறுத்தி நாம் 


அனைவரும் வாழ்ந்திடுவோம். 


அப்படிப்பட்ட எண்ணம் மட்டுமே நம் 


வாழ்வினில் நமக்கு மிக முக்கியம் 


என்று சொல்லி இந்த அளவில் 


விடை பெறுகிறேன். நன்றி !!


வணக்கம் !!. அன்புடன் மதுரை 


TR.பாலு.

No comments:

Post a Comment